TamilSaaga

இந்தியாவில் லட்ச லட்சமாய் சம்பளத்தை அள்ளிய ஐடி ஊழியர்கள்… அதிரடி அறிவிப்பு வெளியிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள்.. திண்டாடி நிற்கும் இளைஞர்கள்!

இந்தியாவில் ஐடி துறையில் வேலை வாய்ப்புகள் குவியத் தொடங்கிய வருடம் முதலே இளைஞர்களுக்கு புது நம்பிக்கை பிறந்தது. அதுவரை அரசு வேலை செய்பவர்கள் மட்டும் தான் அதிகமாக சம்பாதிக்க முடியும் என்ற மனநிலை இருந்து வந்த நிலையில் அதை மாற்றிக் காட்டியது ஐடி துறை என்று சொல்லலாம். லட்ச லட்சமாக ஐடி துறையில் சம்பாதிக்க தொடங்கிய இளைஞர்கள் பலரும், பிளாட், கார் என தங்களது லைப் ஸ்டைலை வசதியாக மாற்றி தற்பொழுது வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் ஐடி துறையில் பணிபுரியும் அனைவரின் வயிற்றிலும் புளியைக் கரைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

கொரோனா நோய் தொற்றுக்குப் பிறகு உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்த நிலையில் உலக மக்களிடையே பொருட்களை வாங்கும் திறன் குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அது மட்டுமல்லாமல் உலகில் பல பகுதிகளில் நடைபெறும் போர்கள், கச்சா எண்ணெய் விலையின் நிலையற்ற தன்மை போன்ற பிற காரணிகளும் பொருளாதாரத்தை நிர்ணயிக்கின்றன. இதன் தாக்கம் ஐடி துறையிலும் எதிரொலிக்க தொடங்கியதால் அமேசான், மைக்ரோசாப்ட்,CTS, google போன்ற பிரபலமான ஐடி கம்பெனிகள் தங்களது பணிநீக்கம் செய்தனர்.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக அமேசான் மற்றும் ஆகிய நிறுவனங்கள் 500க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளனர். இதேபோன்று பொருளாதார மந்தநிலை நீடிக்கும் பட்சத்தில் பணி நீக்கங்கள் தொடரும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் ஐடி துறையில் இதுவரை சொகுசாக சம்பளம் வாங்கிய இளைஞர்கள் தற்பொழுது எதிர்காலத்தை நினைத்து கவலை அடைய தொடங்கியுள்ளனர்.

Related posts