TamilSaaga

“பெருந்தொற்று அறிகுறிகளை சரிபார்க்கவில்லை” : சிங்கப்பூரில் KFC மீது குற்றச்சாட்டு – நான்கு பேர் மீது வழக்கு பதிவு

உலக அளவில் புகழ் பெற்ற நிறுவனம் தான் Kentucky Fried Chicken (KFC) நிறுவனம். இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள ஒரு KFC நிர்வாகம் அதன் விற்பனை நிலையங்களில் ஒன்றில் கோவிட்-19 விதிமுறைகளை மீறியதற்காக நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை (ஜனவரி 12) இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டது. கடந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி இரவு, நான்கு வாடிக்கையாளர்களுக்கு கோவிட்-19 அறிகுறிகள் உள்ளதா என்பதை முதலில் சரிபார்க்காமல், அந்த நான்கு வாடிக்கையாளர்களை அதன் Far East கடைக்குள் அனுமதித்ததாக அந்த நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூர்.. 578 நாட்களுக்கு பிறகு மகள்களை சந்தித்த தாய் : எல்லா வெளிநாட்டு தொழிலாளர்களின் உண்மை நிலை இது தான் – நெகிழ்ச்சி Video

கடைக்குள் நுழைவதற்கு முன், அதன் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருக்கிறதா என்று சோதிக்கப்படுவதை உறுதிசெய்ய, பொருத்தமான நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நிறுவுதல் மற்றும் செயல்படுத்த கடைக்கு பொறுப்பு உள்ளது என்று குற்றப்பத்திரிகைகள் தெரிவித்தன. மேலும் அந்த காலகட்டத்தில் இருவருக்கு மேல் ஒன்றாக உணவருந்த அனுமதிக்கப்படாத நிலையில் நான்கு வாடிக்கையாளர்களும் உணவருந்த அனுமதித்தாகவும் KFC மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பரின் “Circle Line MRT” : சுரங்கப்பாதை அமைக்கும் பணி இன்று நிறைவேறியது – முழு விவரம்

முஹம்மது ஆரிஃபின் சஹ்தான், ஷெஹ்செல் செலமத், நைலா முஹம்மது கமால் மற்றும் முஹம்மது ஹிதாயத் ரஹ்மத் ஆகிய நான்கு வாடிக்கையாளர்களின் பெயரை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இந்நிலையில் இந்த வழக்கு இந்த மாத இறுதிக்கு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோவிட்-19 விதிகளை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக ஆறு மாதங்கள் சிறை தண்டனையும் $10,000 அபராதமும் விதிக்கப்படலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts