TamilSaaga

“இந்த பெருந்தொற்று காலத்தில் சிங்கப்பூரர்களுக்கு உதவி” : புதிய சாதனை படைத்த ComCare

சிங்கப்பூரில் குறைந்த வருமானம் கொண்ட தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு சமூக உதவியை வழங்குகிறது ComCare நிறுவனம். இந்நிலையில் கடந்த 2005ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து அதிக அளவிலான பயனாளிகள் கடந்த நிதியாண்டில் பயனடைந்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சென்ற மார்ச் மாதத்தில் முடிவடைந்த அதன் (ComCare) கடைசி நிதியாண்டில் மொத்தம் 96,040 பயனாளிகள் பல்வேறு சமூகப் பராமரிப்பு நன்கொடை நிதி (ComCare நிதி) திட்டங்களில் இருந்தனர். இது முந்தைய ஆண்டின் 78,580 பேரில் இருந்து 22 சதவீதம் அதிகமாகும்.

மேலும் இந்த நிறுவனம் மூலம் பயனடைந்த மக்களின் அளவின் இரண்டாவது மிக உயர்ந்த எண்ணிக்கை கடந்த மார்ச் 2015ல் பதிவானது. அந்த நிதியாண்டில் 91,093 பயனாளிகள் இருந்தனர். “காம்கேர்” அதன் கடைசி நிதியாண்டில் 236 மில்லியன் டாலர் நிதி உதவிகளை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முந்தைய ஆண்டு 151 மில்லியனில் இருந்து இது 56 சதவீதம் உயர்வு மற்றும் அதன் தொடக்கத்திலிருந்து வழங்கப்பட்ட மிகப்பெரிய தொகை இதுவாகும்.

சிங்கப்பூரின் சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் (MSF) நேற்று புதன்கிழமை (அக்டோபர் 13) ComCareன் வருடாந்திர வெளியிட்டது. காம்கேரின் குறுகிய காலத்திலிருந்து நடுத்தர கால உதவி (SMTA) திட்டத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால் தான் இந்த எண்ணிக்கை அதிகரித்தது என்று கூறப்படுகிறது. இது வேலை தேடும் அல்லது நோய்வாய்ப்பட்டிருப்பதால் கடினமான காலங்களில் உள்ளவர்களுக்கு தற்காலிக நிதி உதவி மற்றும் பிற வகையான உதவிகளை வழங்குகிறது.

SMTA திட்டத்தில் கடந்த நிதியாண்டில் மொத்தம் 80,449 தனிநபர்கள் இருந்தனர், இது முந்தைய ஆண்டை விட 25 சதவீதம் அதிகரிப்பு.

Related posts