TamilSaaga

சிங்கப்பரின் “Circle Line MRT” : சுரங்கப்பாதை அமைக்கும் பணி இன்று நிறைவேறியது – முழு விவரம்

சிங்கப்பூரில் MRT வழித்தடம் நீட்டிப்புக்கான சுரங்கப்பாதை பணிகள் இன்று புதன்கிழமை (ஜனவரி 12) காலை நிறைவடைந்தன என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. கன்டோன்மென்ட் ஸ்டேஷனில் உள்ள சுரங்கப்பாதை முனை 4 கிமீ நீட்டிப்பில் உள்ள மூன்று நிலையங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்த சர்க்கிள் லைனை ஒரு முழுமையான வளையமாக மாற்றுகிறது. இந்த கட்டமைப்பு கடந்த 2019ல் தொடங்கப்பட்ட நிலையில் சுமார் 55 சதவீத சிவில் பணிகள் தற்போது நிறைவடைந்ததைக் இது குறிக்கிறது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிளில் பெண் தோழியுடன் சென்ற நபர் – “அனுபவமின்மையால்” ஏற்பட்ட சோகம்

சிங்கப்பூரின் HarbourFront முதல் Marina Bay வரையிலான நீட்டிப்பு 2026ல் திறக்கப்பட உள்ளது, மேலும் பல இடங்களுக்கான பயண நேரத்தை இந்த புதிய பாதை குறைக்கும். உதாரணமாக, டெலோக் பிளாங்காவிலிருந்து வரும் பயணிகள் மெரினா பே பகுதிக்கு இனி நேரடியாகப் பயணம் செய்யலாம், இதனால் சுமார் 10 நிமிட பயணம் நேரம் மிச்சமாகும். இதற்கிடையில், பாயா லெபரில் உள்ள கிம் சுவான் டிப்போவின் விரிவாக்கப் பணிகள் “நன்றாக முன்னேறி வருகின்றன” என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : Exclusive : சிங்கப்பூரில் வேலை.. மீண்டும் தாயகம் செல்லும் தொழிலாளர்கள் – TV வாங்கி செல்வது லாபமா? நஷ்டமா? – வரி எவ்வளவு?

மேலும் இந்த நிலத்தடி டிப்போவில் சுமார் 23 புதிய ரயில்கள் உள்ளன, அவை விரிவாக்கப்பட்ட வட்டப் பாதைக்காக கையகப்படுத்தப்படும். மொத்தத்தில், விரிவாக்கப்பட்ட கிம் சுவான் டிப்போவில் 133 ரயில்கள் இருக்கும், இது தற்போதைய நிலையில் 70 ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கூடுதல் சிறப்பாக இது 500க்கும் மேற்பட்ட பேருந்துகளை நிறுத்தும் வகையில் உருவாக்கப்படும் ஒரு பேருந்து நிலையத்தையும் இணைக்கும் என்றும் கூறப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts