உலகம் முழுக்க இரவில் உறங்கும் போது அருகில் இருப்பவரின் குறட்டை தொல்லையால் பலரும் பாதிப்பை சந்தித்து இருப்பீர்கள். இந்த பிரச்சனை உலகத்தின் அமைத்து மூளைகளிலும் காணப்படுகிறது. தற்போது பிரிட்டீஷ் நிறுவனம் ஒன்று வெளியிட்ட தனது ஆய்வு முடிவுகளில் உலக அளவில் குறட்டை விடுபவர்களில் சிங்கப்பூருக்கு 3வது இடம் என அறிவித்துள்ளது.
உலகம் முழுதும் கூகுள் தேடலில் குறட்டை என்ற வார்த்தையை கடந்த 1 ஆண்டில் எவ்வாளவு பேர் தேடியுள்ளார்கள் என்பதை கொண்டு இந்த கணிப்பு வெளியிடப்பட்டது. ஒவ்வொரு நகரத்திலும் 1000 பேருக்கு எத்தனை முறை குறட்டை சம்பந்தமான வார்த்தை தேடப்பட்டது என்பது கருத்தில் கொள்ளப்பட்டது.
கடந்த ஓர் ஆண்டில் சிங்கப்பூரில் இருந்து சுமார் 1,39,070 முறை குறட்டை பற்றி இணையத்தில் தேடப்பட்டுள்ளது. இது சுமார் 1000 பேருக்கு 24 முறை என்ற வீதத்தில் உள்ளதாக பிரிட்டிஷை சேர்ந்த “ஸ்லீப்சீக்கர்” என்ற நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
அயர்லாந்தில் உள்ள டப்ளின் நகரம் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த நகரித்தின் தேடல் விகிதமானது 37.9 என உள்ளது.
ஆஸ்திரேலிய தலைநகர் கான்பரா இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இதனுடை இணைய தேடல் விகிதமானது 32.6 ஆக உள்ளது.