TamilSaaga

Breaking : குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வேலை பாஸ் அனுமதியுடன் சிங்கப்பூர் வர அனுமதி – Entry Approvalலுக்கு விண்ணப்பிக்கலாம்

வரும் நவம்பர் 1 முதல், நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் பொது சுகாதார அபாயத்தைக் குறைக்கும் போது நாட்டிற்கு தேவையான தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை அனுமதிக்கும் வகையில், சிங்கப்பூருக்குள் நுழைய தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட வேண்டும். வேலை பாஸ் வைத்திருப்பவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும், மாணவர் பாஸ் ஹோல்டர் லேன் கீழ் நுழைபவர்களுக்கும் இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஒர்க் பெர்மிட், s பாஸ், புலம்பெயர் தொழிலாளர்கள், வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் தங்களுடைய Entry Approval-க்கு அப்ளை செய்யலாம். குறிப்பிட்ட அளவிலான Approvalகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும். உலக அளவில் பரவி வரும் இந்த தொற்று காரணமாக அபாயத்தை குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் MOM தெரிவித்துள்ளது.

மனிதவள அமைச்சகத்தின் அறிக்கை

மேலும் பாஸ் வைத்திருப்பவர்கள் குறைந்தது மூன்றில் இருந்து ஆறு மாதங்கள் வரை காத்திருந்துதான் சிங்கப்பூருக்கு வரமுடியும் என்று மனிதவள அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் குறிப்பாக பங்களாதேஷ், இந்தியா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவதற்கான தடை கடந்த 22 மற்றும் 30 ஏப்ரல் 2021 அன்று சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பின்படி “தடை நீடிக்கிறது”

Related posts