TamilSaaga

ப்ளாஸ்டிக் மோல்டிங் டெக்னாலஜி படித்தவர்களா நீங்க.. சிங்கப்பூர் வேலைக்கு எப்டி அப்ளே செய்யலாம்… இதை மட்டும் செய்தால் போதும்… சிங்கையில் வேலை ரெடி!

சிங்கப்பூரில் குறிப்பிட்ட படிப்புகளுக்கு என்ன மாதிரியான சம்பளம் இருக்கும். வசதிகள் கம்பெனி நிர்வாகம் எதை செய்து தருவார்கள். இதெல்லாம் தெரிந்து கொண்டால் நீங்க படித்த படிப்பிற்கு சிங்கப்பூரில் வேலை எப்படி இருக்கும் என எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

சிங்கப்பூரில் ஒரு படிப்பினை படித்து விட்டு வேறு வேலைக்கு சென்று வேலை செய்து கொண்டிருப்பார்கள் சிலர். பலரோ தாம் படித்த படிப்பிலேயே ஒரு வேலையை தேடிக்கொண்டு இருப்பார்கள். அப்படி நீங்க பிளாஸ்டிக் மோல்டிங் டெக்னிக் படித்திருந்தால் உங்களுக்கு சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு எப்படி இருக்குமுனு தெரிஞ்சிக்கணுமா? இதை தொடர்ந்து படிங்க.

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் மோல்டிங் டெக்னிக் படித்திருந்தால் சிங்கப்பூரில் supervisior, technician அல்லது operator பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது S-Passல் விண்ணப்பிக்கப்படும் வேலை என்பதால் இப்போதுள்ள சூழலில் உங்களில் SPass அப்ளே ஆவதில் காலதாமதம் எடுக்கும். மேலும், கோட்டா ரிலீஸ் ஆகும்வரை வெயிட் செய்வது தான் நல்லது.

இதையும் படிங்க: லட்சத்தில் காசு கொடுக்க முடியாதா? கவலையை விடுங்க… Skilled Test இருக்கு… பாஸ் பண்ண என்ன செய்யணும் தெரியுமா… இத படிங்க முழுசா…

ப்ளாஸ்டிக் மோல்டிங் டிப்ளமோ முடித்து விட்டு சிங்கப்பூர் வந்தால் உங்களில் மினிமம் சம்பளம் $2000 சிங்கப்பூர் டாலராகவும், அதிகபட்சமாக $4000 சிங்கப்பூர் டாலர் வரை இருக்கும். உங்களின் வேலை பிடித்திருந்தால் சில கம்பெனிகள் மாத சம்பளத்துடன் VB எனப்படும் இன்சென்டிவ் கூட கொடுப்பார்கள். உங்களுக்கு பணி அனுபவம் இருந்தால் அதற்கேற்ப மாறுபடும். தங்குமிடம் மற்றும் உணவுக்கான செலவினை நீங்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும். இந்த வேலையில் ஞாயிறு விடுமுறை இருக்கும்.

வேலை எப்படி இருக்கும்? நீங்க படித்த துறை என்பதால் பெரும்பாலும் உங்களுக்கு தெரிந்த வேலைகள் தான் இருக்கும். மேலும், நீங்கள் பணியமர்த்தப்பட்ட இடத்துக்கு ஏற்ப அதன் அளவில் மாற்றம் இருக்கும். இது எல்லா துறைகள் மாதிரி தான் இருக்கும். வெறும் டிப்ளமோ முடித்தவர்கள் சிங்கப்பூரில் இதே துறைகளில் கோர்ஸ் படித்தால் மேலும் ப்ரோமோஷன் கிடைக்கும். இதே துறைகளில் மேனஜராக பணியமர்த்தப்படும் போது உங்களின் மாத சம்பளம் குறைந்ததே $7000 சிங்கப்பூர் டாலர் இருக்கும். பணி அனுபவமும் இருப்பதால் விரைவில் Epass அப்ளே செய்து விடலாம். இந்த வகை பாஸ்களுக்கு கோட்டா பார்க்கப்படாது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் மனைவியுடன் செட்டில் ஆக ஆசையா? வேலைக்கு செல்லும் போதே குடும்பத்துடன் பறக்கணுமா? இந்த பாஸ் தான் உங்களுக்கு வரப்பிரசாதம்

தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு வருஷம் சிங்கப்பூரில் இருக்கும் போது உங்களால் PRக்கு அப்ளே செய்ய முடியும். எனவே, இந்த துறைகளில் நீங்க படித்திருந்தால் தெரிந்த ஏஜென்ட் மூலம் வேலை தேடுங்கள். அதுப்போல சிங்கப்பூருக்கு வேலை தேடும் போது முதலில் ஆன்லைன் வேலை வாய்ப்பு தளங்களில் அப்ளே செய்து பாருங்கள். இதற்கு நிறைய வெப்சைட்கள் இருக்கிறது. இந்த வேலைக்கு நேர்காணல் வர லேட் ஆகும். இருந்தும் உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்பதே குறிப்பிடத்தக்கது. இதற்கு பெரிய அளவில் செலவுகள் இருக்காது. அதுவே ஏஜென்ட் மூலமாக செல்லும் போது 3 முதல் 4 லட்ச ரூபாய் உங்களுக்கு செலவுகள் இருக்கும். செலவுகள் பார்த்து கவலையாக இருந்தால் பொறுமையாக வேலை வாய்ப்புகள் தளங்களில் உடனே தேட தொடங்குகள். நேரம் எடுத்தாலும் நல்ல வேலை கிடைக்கும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts