TamilSaaga

சிங்கப்பூர் ஊழியர்கள் இந்த ஒரு கோர்ஸ் படிச்சா போதும்… பிரபல வங்கியில் வேலைவாய்ப்பு..!

சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்கள் தொழில்நுட்ப திறனை வளர்த்துக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் வகையில் புதிதாக மூன்று தொழில்நுட்ப பயிற்சிகள் NTUC கற்றல் மையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பயிற்சிகளை கற்றுக் கொள்வதன் மூலம் ஊழியர்கள் வேலை தேடி எளிதாக புதிய வேலைக்கு செல்வதற்கு உபயோகமாக இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது வேலைவாய்ப்பு துறையில் மிகவும் அவசியமான திறன்கள் ஆன கிளவுட் கம்ப்யூட்டிங், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், சைபர் செக்யூரிட்டி போன்ற துறைகளில் ஊழியர்களை மேம்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த இரு ஆண்டுகளில் 6000 தொழிலாளர்கள் இந்த திறன்களை வளர்த்துக் கொள்ள முடியுமான கூறப்பட்டுள்ளது. ஊழியர்கள் மட்டுமல்லாமல் மாணவர்களும் இந்த தொழில்நுட்ப வகுப்புகளில் சேர்ந்து கொண்டு திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும்.

இந்த தொழிற் கல்விக்கான பாடத்திட்டங்கள் அமேசான், மைக்ரோசாப்ட் முதலிய நிறுவனங்களுடன் கலந்து ஆலோசித்து தற்பொழுது நடைமுறைக்கு என்ன தேவையோ அவற்றை இணைத்து சிலபஸ் உருவாக்கப்படும். இந்த பயிற்சியில் சேருவோர் பாடத்திட்டத்திற்கு ஏற்ப மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை பெற வேண்டும். பின்னர் வேலை வாய்ப்பு உள்ள துறைகளில் இந்த தொழில்நுட்ப பயிற்சி மூலம் அளிக்கப்படும் சான்றிதழை பயன்படுத்தி எளிதாக வேலை தேடலாம்.

பிரபல வங்கியான UOB, இந்த தொழில் நுட்ப பயிற்சியின் வழியாக பயில்வோரை வேலைக்கு எடுக்க முன்வந்துள்ளது. ஏற்கனவே NTUC நடத்தும் தொழில் நுட்பத் திறனில் பயிற்சி பெற்ற மாணவர்களில் 130 ஊழியர்களை வேலைக்கு சேர்த்து உள்ளோம் என UOB வங்கி தெரிவித்துள்ளது. மேற்கண்ட தொழில்நுட்பத் திறன்கள் தற்பொழுது உள்ள வங்கிகளின் பரிவர்த்தனைக்கு மிகவும் தேவைப்படுவதால் இனிவரும் வருடங்களில் அதிகப்படியான ஊழியர்கள் தேவைப்படுவார்கள் என வேலைக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.

Related posts