TamilSaaga

சிங்கப்பூர் வரும் தமிழர்களே முதல் Immigration என்ன கேட்பார்களோ என கவலையா… இந்த கேள்விக்கு உளறினால் இந்தியாவிற்கு திரும்ப வேண்டியது தான்…

சிங்கப்பூருக்கு வேலைக்காக வந்தாலும், சுற்றுலா பயணியாக வந்தாலும் முதலில் எதிர்க்கொள்ள வேண்டியதில் முக்கியமானது Immigration தான். இதில் அவர்கள் உங்களிடம் கேட்கும் கேள்விகளில் எதுவும் நீங்கள் சொதப்பினால் அப்படியே மீண்டும் தமிழ்நாட்டுக்கே திரும்ப வேண்டியது தான். அதனால் என்ன செய்வார்கள்? என்ன கேட்பார்கள் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்காகவும், சுற்றுலாவிற்காக சிங்கப்பூர் கிளம்பும் போது தேவையான டாக்குமெண்ட்களை சரியாக வைத்து கொள்ள வேண்டும். டிக்கெட்டில் குறிப்பிட்ட அளவில் எடை இருக்கிறதா என சரி பார்க்க வேண்டும்.

இந்தியாவில் இருந்து கிளம்பும்போது Immigration நடக்கும். அங்கு சிங்கப்பூர் வரும் காரணம், வேலை குறித்த தகவலை கேட்டுக்கொண்டு போட்டோ எடுத்துக்கொண்டு அனுப்பி விடுவார்கள். டிக்கெட் மற்றும் விசா இருந்தாலே இதை ஈசியாக முடித்து விடலாம்.

அடுத்து விமானத்தில் ஏறி அமர்ந்து விடலாம். மொபைலை ஏர்ப்ளேன் மோடில் போட்டு விட்டு சீட் பெல்ட் போட்டுக்கொண்டு அமர்ந்து விடலாம். தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து சிங்கப்பூர் வருவதற்கு சுமார் 4 மணி நேரம் 30 நிமிடங்கள் எடுக்கும். இது மற்ற விமான நிலையத்துக்கு ஏற்ப மாறுபடும்.

சிங்கப்பூர் வந்து immigration-ஐ முடித்துக் கொண்டு தான் உங்கள் லக்கேஜை எடுத்துக் கொள்ள முடியும். விமானத்திலேயே உங்களுக்கு பாஸ் குறித்த விண்ணப்பம் கொடுக்கப்படும். அதில் தேவையான தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும். இது முதல்முறை வருபவர்களுக்கே.

வந்து இறங்கியதும், வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் immigration ஆபிசரை பார்க்க வேண்டும். பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள். தொழிலாளர்களுக்கு பெரிய அளவில் கேள்விகள் கேட்கப்படாது. உங்கள் டாக்குமெண்ட் சரி பார்க்கப்படும். போட்டோ, கை ரேகை மற்றும் கண் ரேகை எடுத்துக் கொண்டு உங்களை அனுப்பி விடுவார்கள்.

இதில் சுற்றுலா விசாவில் வருபவர்களுக்கு தான் அதிக கெடுப்பிடி இருக்கும். டூரிஸ்ட் விசாவில் சிங்கப்பூர் வந்தால் தேவையான டாக்குமெண்ட்களை சரியாக வைத்து கொள்ளுங்கள். விசா அப்ளே செய்து கொடுத்தவர்களின் கைப்பேசி எண்ணை வைத்துக் கொள்ளுங்கள். சிங்கப்பூரில் நீங்க தங்க இருக்கும் முகவரியை சரியாக சொல்லுங்கள்.

அதுப்போல, சிங்கப்பூர் வந்ததற்கான காரணத்தை ஆபிசர் கேட்டால் அதையும் தைரியமாக சொல்லுங்கள். இதில் நீங்கள் சொல்வது முன்னுக்கு பின் முரணாக அவர்களுக்கு தோணினால் அடுத்த விமானத்தில் உங்களை தமிழ்நாட்டிற்கே திருப்பி அனுப்பி விடுவார்கள்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts