TamilSaaga

சிங்கப்பூரில் கூட திருட்டு நடக்குமா.. செக் செய்ய லேப்டாப்பை விட்டு சென்ற டிக்டாக்கர்.. ஆனா கிளைமேக்ஸ் ட்விஸ்ட்டு தான் சூப்பருல!

பெருவாரியான நாடுகளில் ஒரு பொருளை தவறுதலாக பொது இடங்களில் தொலைத்தால் அதை திரும்ப பெற முடியாது. ஆனால் சிங்கப்பூரில் உங்கள் பொருள் தெரிந்தே நீங்கள் விட்டு சென்றால் கூட அது தொலையாதாம். அதனை டிக்டாக்கர் ஒருவர் வீடியோவாக எடுத்தே வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிக்டாக்கில் வித்தியாசமான விஷயங்களை வீடியோவாக எடுத்து வெளியிடுவது வழக்கமாகி இருக்கிறது. இந்த டெக்னிக்கை பயன்படுத்திய Uptin Saiidi என்ற பயனர் ஒருவர் சிங்கப்பூரில் இருக்கும்
ஸ்டார்பக்ஸில் தனது விலையுயர்ந்த லேப்டாப்பை ஓபன் செய்து வைத்து விட்டு வெளியில் கிளம்பி விடுகிறார். யாரிடமும் அதை பார்த்து கொள்ளக் கூட சொல்லவில்லை.

அருகில் இருக்கும் உணவகத்துக்கு சென்று லஞ்ச் சாப்பிட சென்று விடுகிறார். அந்த வீடியோவில் பேசி இருக்கும் Uptin, சிங்கப்பூரில் சாதாரண குற்றமாக கருதப்படும் செயல்கள் கூட கடந்த 250 நாட்களாக நடக்கவே இல்லையாம். சிங்கப்பூர் அரசாங்கம் குற்றத்தை நடக்காமல் பார்த்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதாவது இங்கிருக்கும் ஒருவருக்கு கூட கடந்த 8 மாதங்களில் மொபைல் போன் தொலைந்து போகவில்லையாம். இப்படி சிங்கப்பூர் மிக மிக குறைந்த குற்றங்களை கொண்டிருப்பதற்கு மூன்று காரணங்கள் கூறப்படுகிறது. முதலாவதாக, இங்கிருக்கும் மக்கள் பொதுவாகவே நேர்மை அனைவரிடத்திலும் கடைபிடிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

அடுத்து, இங்கு வீடு இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது. பெரும்பாலானவர்கள் நிலபுலன்களுடன் நல்ல வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர். மூன்றாவதாக, இங்கு சின்ன இடத்தில் கூட கண்காணிப்பு கேமராக்கள் இருக்கும். இதனால் தான் சிங்கப்பூரில் குற்றங்கள் நடப்பது அரிதாக இருக்கிறது என்றார்.

ஒரு மணிநேரம் கழித்து பொறுமையாக தன் லேப்டாப்பை வைத்த ஸ்டார்பக்ஸிற்கு சென்றார். அவர் வைத்த இடத்தில் சின்ன மாற்றம் கூட இல்லாமல் லேப்டாப் அங்கையே இருந்தது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் டாப் ஹிட் அடித்து வருகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts