TamilSaaga

அட்டகாசமாக தொடங்கியுள்ள இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி! கடைசியாக இந்தியாவுக்கு நடந்தது சின்ன ரீகேப்

இந்தியா – இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி, நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. ஒன்றரை மாத  ஓய்வுக்கு பிறகு இங்கிலாந்தை எதிர்கொள்ள தயாராகி இருக்கும் இந்தியாவுக்கு ஏகப்பட்ட சவால்கள் காத்திருக்கிறது.

கோலி தலைமையிலான இந்திய அணியில் இந்தியா: கோஹ்லி (கேப்டன்), ரோகித், ரகானே, புஜாரா, ஆர்.அஷ்வின், கே.எல்.ராகுல், ஷமி, பும்ரா, ஜடேஜா, சிராஜ், அக்சர், இஷாந்த்,   அபிமன்யூ ஈஸ்வரன் (அறிமுகம்), பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி, உமேஷ், சூர்யகுமார் (அறிமுகம்), ஷர்துல் தாகூர், சாஹா (விக்கெட் கீப்பர்), ரிஷப் பன்ட். விளையாடுகின்றனர்.

இந்தியா தற்போது பேட்டிங்கை தொடங்கி 50 ரன்களை கடந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. (இந்த செய்தியின் வெளியீட்டு நேரப்படி) வழக்கம் போல் சொந்த்த மண்ணில் இங்கிலாந்து ஆடுவதால் அவர்களுக்கு கூடுதல் பலம்.

கடையாசியாக இந்தியாவுக்கு நடந்தது:

கடந்த ஆண்டு இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 டெஸ்டில் இந்தியா 3, இங்கிலாந்து 2ல் வென்றுள்ளன. கடைசியாக இந்தியாவில் நடந்த தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியாவும் (4 போட்டி), இங்கிலாந்தில் நடந்த தொடரை 4-1 என இங்கிலாந்தும் வென்றுள்ளன.இங்கிலாந்து – இந்தியா 34 டெஸ்ட் தொடர்களில் மோதியுள்ளன. அவற்றில் இங்கிலாந்து 19, இந்தியா 11ல் வென்றுள்ளன. 4 தொடர்கள் டிராவில் முடிந்தன. மொத்தம் 126 டெஸ்டில் மோதியுள்ளதில் இங்கிலாந்து 48, இந்தியா 29ல்  வென்றுள்ளன. எஞ்சிய 49 டெஸ்ட் டிராவானது.

எனவே இந்தியா இந்த டெஸ்ட் தொடரில் ஜெயிக்க தீவிரம் காட்டி வருகிறது. அதுமட்டுமில்லை இங்கிலாந்தில் இந்த போட்டி நடைபெறுவதால் அவர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

Related posts