சிங்கப்பூரில் லாட்டரி குலுக்கல் என்பது அதிகாரப்பூர்வமான ஒன்று தான். இங்கு பலவிதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு உள்ளன. இதில் நீங்கள் உண்மையாகவே அதிர்ஷ்டசாலியாக இருக்கும் பட்சத்தில் பல கோடி வரை நீங்கள் வெல்லலாம்.
சிங்கப்பூரில் அடிக்கடி கோடிகளில் பரிசு வாங்கியது குறித்த செய்திகளை பார்க்கும் போது நமக்கும் இப்படி நடக்காதா என யோசிக்கும் ஆளா நீங்க… அப்போ இதை தொடர்ந்து படிங்க. சிங்கப்பூரில் இருக்கும் பிரபல மூன்று லாட்டரிகள் குறித்த தகவல்களும். இதில் கொடுக்கப்பட்டு வரும் பரிசுத்தொகை குறித்தும் விவரமாக தெரிந்து கொள்ளுங்கள். அப்புறம் நீங்களும் அதிர்ஷ்டசாலி தான்.
TOTO:
சிங்கப்பூரின் பிரபல லாட்டரிகளில் இதுவும் ஒன்று. வாரம் இருமுறை இந்த லாட்டரியில் குலுக்கல் நடைபெறும். 7 க்ரூப்களில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. $5,675,646ல் தொடங்கி $10 சிங்கப்பூர் டாலர் வரை கொடுக்கப்பட்டு வருகிறது. மொத்த லாட்டரி விற்பனையில் 38 சதவீதம் முதல் பரிசாக கொடுக்கப்படும். இரண்டாவது பரிசு 8 சதவீதம், மூன்றாவது பரிசு 5.5 சதவீதம் வெற்றியாளர்களுக்கு கொடுக்கப்படும். உங்க நாள் நல்லா இருந்தா 10 கோடிக்கு அதிகமாகவே பரிசுகள் கிடைக்கும்.
4D:
சிங்கப்பூரின் 4D லாட்டரி வாரத்தில் புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. 4D என்பது 4 digits. நீங்களாக 4 இலக்க எண் கொடுக்க வேண்டும். லாட்டரி தரப்பில் இருந்து 23 எண்களை குலுக்கலில் அறிவிப்பார்கள். $1 டாலர் கொடுத்து வாங்கப்படும் லாட்டரி சீட்டின் முதல் பரிசாக $2000 சிங்கப்பூர் டாலர் பரிசாக கிடைக்கும். இரண்டாவது பரிசாக $1000 கிடைக்கும். $490 டாலர் மூன்றாம் பரிசாக கிடைக்கும்.
Singapore Sweep:
Singapore Sweep லாட்டரியின் குலுக்கல் மாதம் முதன் புதன்கிழமையில் நடைபெற்று வருகிறது. இந்த லாட்டரியில் முதல் பரிசே $2.3 மில்லியன் சிங்கப்பூர் டாலர்களாக இருக்கிறது. லாட்டரி டிக்கெட்டின் விலை 3 வெள்ளியாக இருக்கிறது. 7 இலக்க எண்ணை நிர்வாகம் வெளியிடும் அந்த குறிப்பிட்ட எண்ணை சரியாக வைத்திருப்பவருக்கே முதல் பரிசு கிடைக்கும். இந்த பரிசுத்தொகை இந்திய ரூபாயில் 13 கோடியாக மதிப்பிடப்படுகிறது.
இருந்தும் எக்கசக்கமாக பரிசுத்தொகை விழுந்தாலும் இதில் ஆயிரக்கணக்கான் நபர்களுக்கு எதுவும் கிடைக்காமல் செல்வதே சொல்லப்படாத உண்மை. லாட்டரியை பொழுதுப்போக்காக வைத்திருக்கும் வரை அதில் எந்த பிரச்னையும் இல்லை. அதற்கு அடிமையானால் தான் உங்கள் பொருளாதாரம் பெருவாரியாக பாதிக்கப்படும். உழைப்பால் வரும் பணத்திற்கே அதிக காலம் வாழ்க்கை என்பதை மறவாதீர்கள்.