TamilSaaga

சிங்கப்பூரில் மனைவியுடன் செட்டில் ஆக ஆசையா? வேலைக்கு செல்லும் போதே குடும்பத்துடன் பறக்கணுமா? இந்த பாஸ் தான் உங்களுக்கு வரப்பிரசாதம்

சிங்கப்பூரில் வேலை செய்து வரும் ஊழியர்கள் குடும்பத்துடன் இங்கு வந்து தங்க என்னென்ன வழிகள் இருக்கு. அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாஸ்கள் குறித்த முக்கிய தகவல்கள் குறித்து தான் தொடர்ந்து பார்க்க போறோம்.

சிங்கப்பூருக்கு உங்க குடும்பத்துடன் வர விரும்பினால் அதற்குரிய முதல் தகுதியே உங்க சம்பளம் தான். நீங்க $6000 சிங்கப்பூர் டாலர் அல்லது அதற்கு மேல் சம்பளம் வாங்கினால் உங்க குடும்பத்தினை Dependent விசாவில் அழைத்து வர முடியும். ஏற்கனவே சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்கள் சம்பளம் உயர்ந்தவுடன் கம்பெனியில் சொல்லி அவர்களுக்கு விசா அப்ளே செய்ய சொல்லலாம்.

புதிதாக $6000 சிங்கப்பூர் டாலர் சம்பளத்தில் EPass அப்ரூவ் ஆன ஊழியர்களும் உங்க கம்பெனியில் சொன்னால் 3 வாரங்கள் அவர்களுக்கும் விசா கொடுக்கப்பட்டு விடும். இதனால் உங்க சம்பளமே இதற்கு முதல் தகுதியாக பார்க்கப்படுகிறது. dependent விசா அப்ளே செய்ய ஏஜென்ட்டினையும் அணுகலாம். நீங்கள் சட்டப்படி திருமணம் செய்த துணையை மற்றும் 21 வயதுக்கு கீழ் இருக்கும் திருமணமாகாத பிள்ளைகளுக்கு dependent visa அப்ளே செய்ய முடியும்.

துணைக்கு சான்றாக பாஸ்போர்ட் மற்றும் திருமண சான்றிதழ் கேட்பார்கள். பிள்ளைகளுக்கு பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், பெற்றோரின் பாஸ்போர்ட் கொடுக்க வேண்டும். வெளிநாட்டில் பிறந்த 12 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளின் தடுப்பூசி விபரங்களையும் சமர்பிக்க வேண்டும். அப்ளிகேஷன் சப்மிட் செய்யும் போது $105 சிங்கப்பூர் டாலர் கேட்பார்கள். பாஸ் அப்ரூவ் ஆனவுடன் ஒவ்வொரு பாஸுக்கும் $225 சிங்கப்பூர் டாலர் கேட்கப்படும்.

உங்க குடும்ப உறுப்பினர்களுக்கு Dependant பாஸ் அப்ரூவ்வாகாத பட்சத்தில் Long-Term Visit பாஸ் அப்ளே செய்யலாம். இந்த பாஸில் சிங்கப்பூரில் இருப்பவர்களால் வேலையும் செய்ய முடியும். இதை வைத்து வேலை தேடி அதில் உங்களுக்கு Spass அல்லது Epassல் வேலை கிடைத்து விட்டால் உங்களின் dependent pass கேன்சல் ஆகிவிடும். இதுவே நீங்க வொர்க் பெர்மிட்டில் வேலை செய்தால் dependent visa வை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.

இதுவே இந்த பாஸில் இருப்பவர்களால் சிங்கையில் தொழில் தொடங்க கூட முடியும். MOMல் ஒரு letter of consent கொடுத்து அது ஓகே ஆகும்பட்சத்தில் தொழில் செய்யலாம். EP மற்றும் S pass வைத்திருக்கும் குடும்பங்களுக்கு dependent pass அப்ரூவ் ஆக அதிகபட்சமாக 3 வாரங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts