சிங்கப்பூரில் எண்ணெய் சாராத பிற ஏற்றுமதி பொருள்களின் விதமானது கடந்த 13 மாதங்களாக தொடர்ந்து சரிவை கண்டு வந்த நிலையில் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த நவம்பர் மாதத்தில் ஏற்றுமதியானது ஒரு விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி விகிதமானது 3.5 சதவீதம் சரிவுடன் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் எலக்ட்ரானிக்ஸ் அல்லாத பிற பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்தது தான் என தெரியவந்துள்ளது.
மருந்து பொருட்களுக்கான ஏற்றுமதி 118.9 சதவீதம் அதிகரித்துள்ளதும், தங்கத்தின் ஏற்றுமதியானது 106.5 அதிகரித்துள்ளதும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுகளாக சிங்கப்பூர் நாட்டின் ஏற்றுமதி விழுக்காடானது குறைந்து காணப்பட்டது. சிங்கப்பூர் வழக்கமாக ஏற்றுமதி செய்யும் நாடான தைவான், ஐரோப்பிய நாடுகள், இந்தோனேஷியா, தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு செய்யப்படும் ஏற்றுமதி சதவீதம் குறைந்தது தான்இதற்கு காரணம் என கூறப்பட்டது.
ஆனால் இந்த நாடுகளை தவிர அமெரிக்காவுக்கு செய்யப்பட்டு ஏற்றுமதியானது கடந்த நவம்பர் மாதத்தில் அதிகரித்ததே சிங்கப்பூர் ஏற்றுமதிக்கு காரணம் என தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து சீனாவிற்கு செய்யப்பட்ட ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது இதற்கு காரணமாகும். எனவே ஒட்டு மொத்தமாக பார்க்கும் பொழுது கடந்த நவம்பர் மாதத்தில் ஏற்றுமதி சதவீதம் ஆனது சிங்கப்பூரின் ஒட்டுமொத்த ஏற்றுமதி சதவீதத்தை கடந்த ஒரு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்த்தி உள்ளது.