சிங்கப்பூரில் நாளை (ஏப்ரல்.1) முதல் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைவரும் “Entry Approval” இல்லாமல் நாட்டிற்குள் நுழைய முடியும். இதற்கான தளர்வுகளை கடந்த வாரம் பிரதமர் லீ அறிவித்திருந்தார்.
அதன்படி, இனி முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள், 12 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகள், இன்று (மார்ச் 31) இரவு 11.59 மணி முதல் சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு முன் அவர்கள் எடுக்கவேண்டிய “Pre Departure Test மட்டும் எடுத்தால் மட்டும் போதும்.
ஆகையால் இனி Entry Approval பெறவேண்டிய அவசியம் இல்லை. தனிமைப்படுத்துதலும் கிடையாது. மேலும் சிங்கப்பூர் வந்திறங்கிய 24 மணி நேரத்திற்குள் ART சோதனை எடுக்க வேண்டியதில்லை. தினசரி சிங்கப்பூர் வருபவர்களின் எண்ணிக்கையில் எந்தவித Quotaகளும் இருக்காது. Vaccinated Travel Frame Work என்று அழைக்கப்படும் இந்த புதிய விதி VTL சேவைக்கு மாற்றாக அமையும்.
இந்நிலையில், சிங்கப்பூரின் ICA (Immigration & Checkpoints Authority) வெப்சைட்டில் VTL எனும் ஆப்ஷன் நீக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை, இந்த வெப்சைட்டில், VTL எனும் தனி பிரிவு இருந்தது. தற்போது அந்த ஆப்ஷனே காணவில்லை. இதன் மூலம், பயணிகள் இனி VTL-க்கு விண்ணப்பிக்க தேவையில்லை என்பது உறுதியாகியுள்ளது.
News Source
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
9600 223 091