TamilSaaga

“முடி வெட்ட போனது ஒரு குத்தமா?” : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரிடம் 1450 வெள்ளி வசூலித்த சலூன்

சிங்கப்பூரில் பூன் லே ஷாப்பிங் சென்டரில் உள்ள முடி திருத்த நிலையத்திற்கு சென்ற வெளிநாட்டு தொழிலாளி ஒருவரிடம் 1,450 வெள்ளி கட்டணம் விதித்து அந்த தொழிலாளி ஏமாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த வெளிநாட்டு தொழிலாளி, Organic Saloon என்ற கடையின் கண்ணாடி கதவில் ஒரு பதாகையைப் பார்த்துள்ளார்., அதில் 2 வெள்ளி விலையில் முடி வெட்டப்படும் என்ற வாசகத்தை கண்டுள்ளார்.

இதனையடுத்து அவர் அண்ட் கடையில் முடி வெட்டுதல் மற்றும் முடி சிகிச்சை செய்ய முடிவு செய்தார். இதனை அடுத்து ஹேர்கட் (45 வெள்ளி), ஸ்டைலிங் (45 வெள்ளி) கலரிங் (39 வெள்ளி) மற்றும் உச்சந்தலை சிகிச்சைக்காக ஜூலை 20 அன்று Tiew அந்த கடைக்கு சென்றுள்ளார். ஸ்கால்ப் சிகிச்சைக்கு 99 வெள்ளி என்ற அளவை ஒத்துக்கொண்டு அவர் அந்த சேவைகளை ஏற்றுள்ளார்.

அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு அவர் பணத்தை இணைய வழியில் செலுத்திவிட்டு அலுவலகம் சென்றுள்ளார். அவர் வேலைக்கு வந்தபோது, ​​ஒசிபிசி வங்கியிடமிருந்து ஒரு SMS பெற்றார், அதில் அவர் அந்த கடைக்கு கொடுக்கவேண்டிய 228 வெள்ளிக்கு பதிலாக, ஒரு 1,450 வெள்ளி வசூலிக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ந்துள்ளார்.

உடனடியாக டியூ திரும்பிச் சென்று தனது பணத்தைத் திரும்பக் தர கோரியுள்ளார். ஆனால் அந்த கடை எடுக்கப்பட்ட கூடுதல் பணம், எதிர்கால நியமனங்களுக்காக என்று கூறி தன்னைத் தற்காத்துக் கொண்டுள்ளது. ஆனால் அது வேண்டாம் என்று கூறி தொகையை திரும்பக்கேட்ட நிலையில் அந்த முடி திருத்தும் நிலையம் 725 வெள்ளி பணத்தை திரும்ப அளித்துள்ளது.

ஆனால் 228 வெள்ளிக்கு பதிலாக அவரிடம் அந்த கடை 727 வெள்ளி பெற்றதை மீண்டும் அவர் அந்த கடைக்காரரிடம் கேட்டுள்ளார். அதன் பிறகு தான் 99 வெள்ளி விலை கூறப்பட்ட ஸ்கால்ப் சிகிச்சைக்கு 598 வெள்ளி தொகை பெறப்பட்டதை கண்டறிந்து தற்போது அந்த நிலையம் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

Related posts