TamilSaaga

“சிங்கப்பூர் வரும் பயணிகள் கவனத்திற்கு” : VTL சோதனை முறை எளிமைப்படுத்தப்படும் – MOH அறிவிப்பு

சிங்கப்பூரின் தடுப்பூசி போடப்பட்ட பயண பாதை (VTL) விமானம் மற்றும் நில சோதனைச் சாவடிகள் வழியாக சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகளுக்கான சோதனை முறை எளிமைப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 21) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை, இரவு 11.59 மணி முதல், VTL பயணிகள் அவர்களின் சிங்கப்பூர் வருகையின் 2 முதல் 7 நாட்களுக்குள் தங்களுடைய தங்குமிடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றால், மேற்பார்வை செய்யப்படாத சுய-நிர்வாக ஆன்டிஜென் விரைவான சோதனைகளை (ART) செய்ய வேண்டும்.

“தித்திக்கும் கரும்பும், அத்யாவசிய பொருட்களும்” : புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கிய சிங்கப்பூர் IAEC

பயணிகள் தங்கள் ART முடிவுகளைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் வெளியே செல்வதற்கு முன் எதிர்மறையாக சோதனை செய்திருக்க வேண்டும். அதேபோல வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.59 மணிக்கு முன் வரும் VTL பயணிகள் ஏற்கனவே இருக்கும் சோதனை முறையைத் தொடர வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் அதன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது. சிங்கப்பூர் வந்த 2 மற்றும் 7வது நாட்களில் சோதனை மேற்கொள்ளும்போது தொற்று உறுதியானால் சிங்கப்பூர் அரசு குறிப்பிட்டுள்ள Protocol 2ன் படி பயணிகள் செயல்பட வேண்டும்.

மேலும் அறிகுறிகள் இல்லாவிட்டால் அவர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் தேவையில்லை. இருப்பினும், ஒரு மருத்துவர் அவர்களுக்கு லேசான பாதிப்பு இருப்பதாக மதிப்பிட்டால், அறிகுறிகளைத் தீர்ப்பதற்குத் தேவையான ஓய்வு காலத்தை ஈடுசெய்ய அவர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் வழங்கப்படும். சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான VTL விமானம் மற்றும் பேருந்து டிக்கெட்டுகளில் 50 சதவீத வரம்பை தொடர்ந்து பராமரிக்கும் என்று MOH மேலும் கூறியது.

“முடிந்தது VTL தடை”, இந்திய – சிங்கப்பூர் VTL பயணத்தில் மாற்றங்கள் இருக்குமா? – எத்தனை PCR சோதனை எடுக்கவேண்டும்?

“உள்ளூர் மற்றும் உலகளாவிய COVID-19 நிலைமையை நாங்கள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்வோம் மற்றும் அதற்கேற்ப எங்கள் நடவடிக்கைகளை சரிசெய்வோம்” என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts