சிங்கப்பூரில் சைக்கிள் ஓட்டிகளுக்கு ஒரு மகிழ்ச்சிகரணமான செய்தியை அளித்துள்ளது Google Maps. கூகுள் மேப்ஸ் ஒரு புதிய அம்சத்தை சைக்கிள் ஓட்டிகளுக்கு என்று அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் தென்கிழக்கு ஆசியாவில் சிங்கப்பூர் தான் அந்த அம்சத்தை அனுபவிக்கும் முதல் நாடு என்ற சிறப்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய அப்டேட் சிங்கப்பூரில் உள்ள டெஸ்க்டாப் மற்றும் மொபைல் கூகுள் மேப் பயனர்களுக்கு கடந்த நவம்பர் 8ம் தேதி முதல் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் இந்த அப்டேட் வந்துள்ளது.
இந்த புதிய அம்சத்தில் 6,800 கிமீ சைக்கிள் ஓட்டும் பாதைகள் மற்றும் பைக்கிங் திசைகள் உள்ளன, இவை அனைத்தும் பயன்பாட்டில் நேரடியாக கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. சிங்கப்பூர் முழுவதும் உள்ள முக்கிய பூங்காக்கள் மற்றும் இயற்கைப் பகுதிகளை இணைக்கும் அம்சங்கள், பிரத்யேக சைக்கிள் ஓட்டுதல் பாதைகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மிதிவண்டிக்கு ஏற்ற சாலைகள் ஆகியவற்றை இணைக்கும் தீவு முழுவதும் பரவியிருக்கும் படிப்படியான சைக்கிள் ஓட்டும் திசைகளையும் சைக்கிள் ஓட்டுபவர்கள் இதன் மூலம் பார்க்கலாம்.
இந்த அம்சம் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு எக்ஸ்பிரஸ்வே மற்றும் சுரங்கப்பாதைகளைத் தவிர்க்க உதவும், எக்ஸ்பிரஸ்வே மற்றும் சுரங்கப்பாதைகளைத் பயனர்கள் பயன்படுத்தாமல் தவிர்ப்பதால் அவர்களுக்கான ஆபத்தை தடுக்கிறது இந்த புதிய அம்சம். மற்ற பயனுள்ள கூறுகளில், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மூலம் ஒருவரின் பயண முன்னேற்றத்தைக் கண்காணிப்பது, நிகழ்நேரத்தில் ETA புதுப்பிப்புகளைப் பெறுவது மற்றும் பாதையின் உயரத்தைக் கண்டறிவது ஆகியவை அடங்கும்.
சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) மற்றும் தேசிய பூங்கா வாரியம் (NParks) மூலம் சுமார் 500 கிமீ தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. கூகுளின் தென்கிழக்கு ஆசியாவின் ஜியோ பார்ட்னர்ஷிப்களின் தலைவர் கோர்டுலா ஓர்டெல், சிங்கப்பூரில் சைக்கிள் ஓட்டுவதற்கான வழிகளுக்கான கூகுள் தேடல்களில் “பெரிய அதிகரிப்பு” ஏற்பட்டுள்ளதாகவும். 2020ம் ஆண்டிலிருந்து சுமார் 75 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும் கூறினார். 2019ம் ஆண்டிலிருந்து 400 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.