TamilSaaga

சிங்கப்பூர் ஷாப்பிங் மால்களில் தீவிர சோதனை.. மக்களின் தடுப்பூசி நிலை குறித்து பதிவு – முழு தகவல்கள்

சிங்கப்பூரில் நேற்று புதன்கிழமை (அக்டோபர் 13) சில ஷாப்பிங் மால்களின் நுழைவு வாயில்களில் மக்களின் கோவிட் -19 தடுப்பூசி நிலை குறித்த சோதனைகள் தொடங்கி நடைபெற்றதால் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

புதிய விதிகளின்படி, தடுப்பூசி போடப்படாதவர்கள் மால்கள் மற்றும் பெரிய தனி கடைகளில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு பணிபுரியும் ஊழியர்களில் தடுப்பூசி போடாதவர்களுக்கும், ஷாப்பிங் மால்களில் மருத்துவம் மற்றும் குழந்தை பராமரிப்பு தொடர்பான சேவைகளை அணுக வருபவர்களுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்,ல் ஆனால் அவர்கள் தகுந்த ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மால்களில் ​​வாடிக்கையாளர்களின் தடுப்பூசி நிலையைச் சரிபார்க்க ஊழியர்கள் அதற்கேன இருந்தனர் எனவும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

சில மால்களில் நுழைவாயில்களில் போக்குவரத்து சீராக இருந்தது மற்ற இடங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

செராங்கூனில் உள்ள NEX ஷாப்பிங் மாலில் MRT நிலையத்துடன் இணைக்கப்பட்ட நுழைவாயிலில் சில நீண்ட வரிசையால் மக்கள் தாமதத்திற்கு உள்ளானார்கள். சில சமயங்களில் வரிசை எஸ்கலேட்டரை வரை நீண்டு நெரிசலை ஏற்படுத்தியது எனவும் தெரியவந்துள்ளது.

பல இடங்களில் இரண்டு ஊழியர்கள் வாடிக்கையாளர்களின் தடுப்பூசி நிலையை சரிபார்க்க அதற்கான ஒரு சாதனத்தைப் பயன்படுத்திப் பார்க்கிறார்கள் என தகவல்கள் கிடைக்கின்றன. பார்வையாளர்கள் தங்களின் TraceTogether செயலியைப் பயன்படுத்தி சாதனத்தில் தங்கள் தொலைபேசி எண்களஒ பதிவிட வேண்டும். பின்னர் அவர்களின் தடுப்பூசி நிலையை காண்பிக்க வேண்டும்.

மேலும் ஒரு பாதுகாவலர் மக்கள் சோதனை செய்ததை உறுதிசெய்யவும் மற்றொரு பணியாளர் பார்வையாளர்களின் தடுப்பூசி நிலையை தானாகவே பதிவு செய்யும் சாதனத்தை பயன்படுத்துவதற்காகவும் காணப்படுகிறார் என தெரிகிறது.

Related posts