TamilSaaga

சிங்கப்பூரின் மத்திய விரைவு சாலை அருகே நேற்று கோர விபத்து… சம்பவ இடத்திலேயே இரண்டாக பிளந்த கார்!

சிங்கப்பூரின் மத்திய விரைவு சாலை அருகில் நேற்று நடந்த விபத்தில் 26 வயது நிரம்பிய ஆண் மரணமடைந்தார். Seletar West Link செல்லும் வழியில் நள்ளிரவு விபத்து ஏற்பட்டதாக தெரிகின்றது. விபத்து குறித்து நள்ளிரவு 12 மணிக்கு மேல் காவல்துறைக்கு தகவல் கிடைத்த நிலையில் போலீசார் மற்றும் சிங்கப்பூரின் குடிமை தற்காப்பு படை ஆகியவை விரைந்து சென்றன.

ஆனால் அவர்கள் செல்வதற்கு முன் ஆண் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அவருடன் 26 வயது மதிக்கத்தக்க பெண்ணும் பயணித்த நிலையில், படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வாகனத்தை இயக்கிய ஓட்டுனரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காருக்குள் சிக்கிய ஓட்டுநரை அதிகாரிகள் கருவியை கொண்டு வெளியேற்றினர். அவர் விரைவாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த விசாரணையை காவல்துறை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், விபத்து ஏற்பட்ட காரின் புகைப்படத்தை சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அதில் சாம்பல் நிற கார் இரண்டாக பிளந்து காட்சியளிக்கின்றது. இவ்வளவு கோரமான விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இந்நிலையில் சாலைகளில் செல்லும் பொழுது பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்து கவனத்துடன் செல்லுமாறு குடிமக்களை போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related posts