TamilSaaga

‘ஜெயிலர்’ படத்தை பார்க்க ஜப்பானிலிருந்து சென்னைக்கு பறந்து வந்த தம்பதிகள்… ரஜினியின் டயலாக்கை பேசி மாஸ் செய்யும் வீடியோ இணையத்தில் ட்ரெண்ட்!

ரஜினிக்கு தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது நாம் அறிந்த விஷயமே. அதற்கும் ஒரு படி தாண்டி, ரஜினியின் ஜெயிலர் படத்தினை பார்ப்பதற்காக ஜப்பானிலிருந்து ஒரு தம்பதி கிளம்பி சென்னை வந்து படத்தை பார்த்து ரசித்துள்ளனர். தற்பொழுது இந்த வீடியோ தான் இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. ரஜினி நடித்த முத்து படமானது முதல் முதலாக ஜப்பானில் வெளியான நாள் முதலே பெரிய அளவில் ஹிட் அடித்தது. அந்த படம் வெளியானது முதல் ரஜினி மற்றும் மீனாவிற்கு ஜப்பானில் பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது.

அதுக்கு அடுத்தபடியாக வெளிவந்த பாட்ஷா படமும் ஜப்பானில் நல்ல வசூல் வேட்டையை குவித்தது. எனவே, தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரை ஜப்பானும் கொண்டாட ஆரம்பித்தது. நிலையில் இருவது வருடமாகியும், ரஜினி மீது கொண்ட அன்பின் காரணமாக ஜப்பான் தம்பதி சென்னைக்கு வந்து படம் பார்த்துள்ளனர். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பே பல விமர்சனங்களை பெற்றது. விஜய் வைத்து நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம் சரியாக ஓடாத காரணத்தினால், ரஜினியின் படமும் அப்படித்தான் இருக்கும் என பலர் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர்.

ஆனால் படத்தின் ப்ரோமோ வெளியானவுடன் மக்களிடம் நிலைமை தலைகீழாக மாறியது. ப்ரோமோ ரஜினி ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் மாஸாக இருந்ததால் படத்தில் எதிர்பார்ப்பு கூடியது. படத்தை பார்த்த மக்கள் அனைவரும் இதுவரை நேர்மறையான விமர்சனங்களையே வைத்து வருவதால் படம் வசூல் வேட்டையில் நன்கு குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படம் முடிந்தவுடன் இமயமலைக்கு ரஜினிகாந்த் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. எளிமைக்கும், மாஸ்க்கும், ஸ்டைலுக்கும் பொருத்தமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜப்பானில் ரசிகர்கள் இருப்பது என்பது ஆச்சரியமூட்டும் விஷயம் அல்ல!

Related posts