நம் நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் சிங்கப்பூர் மற்றும் அரபு நாடு போன்றவற்றில் பணிபுரிந்து வருவது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. அதிலும் குறிப்பாக சிங்கப்பூரனை “குட்டி தமிழ்நாடு” என்று சொல்லும் அளவிற்கு அங்கு பணிபுரியும் மற்றும் வசிக்கும் தமிழர்கள் ஏராளம்.
சம்பளம் என்ற ஒரு விஷயத்திற்காக மட்டும் குடும்பங்களை விட்டு அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சிறப்பான முதலாளி அமைவது என்பது உண்மையில் வரம் தான். ஏனென்றால் அங்கு பல தொழிலாளர்கள் தங்களது முதலாளியின் முகத்தை கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
மெஷின் போல் காலையில் எழுந்ததும் வேலைக்கு போய் இரவு தூங்குவதற்கு மட்டுமே ரூமிற்கு வரும் தொழிலாளர்கள் ஏராளம். அங்கு தான் பணிபுரியும் கம்பெனி பெயரை தவிர, முதலாளியின் பெயர் கூட பலருக்கு தெரியாது என்பதை உண்மை.
இந்நிலையில் ஆச்சரியமூட்டும் சம்பவம் பரமக்குடியில் நடந்தேறி இருக்கின்றது. ராமநாதபுரம், பரமக்குடியில் உள்ள செய்கழுத்தூர் என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர்தான் கலைவாணர். கலைவாணருக்கும், ஆனந்தி என்பவருக்கும் திருமணம் நிச்சயமாகி பார்த்திபனூர் என்ற ஊரில் திருமணம் நடந்தது.
2014 முதல் சிங்கப்பூரில் சிவில் இன்ஜினியராக பணிபுரிந்து வரும் தொழிலாளி தனது முதலாளியிடம் நீங்கள் கண்டிப்பாக வந்து எனது திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். முதலாளியும் நான் கண்டிப்பாக வந்து உங்கள் திருமணத்தை நடத்தி தருகின்றேன் என்று வாக்கு கொடுத்திருந்தார்.
அனைவரும் சம்பிரதாயத்திற்காக கூறும் வார்த்தை இது என்றாலும் முதலாளி வருவாரா என்ற சந்தேகம் கலைவாணரின் மனதுக்குள் இருந்தது. ஆனால் சரியாக திருமணத்திற்கு வந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கின்றார் முதலாளி.
தனது முதலாளி ஸ்டீபன் லீ குவான் யு திருமணத்திற்கு வருவதை அறிந்த கலைவாணர் அவருக்கு ட்ரம் செட், பட்டாசு என அனைத்தையும் கொளுத்தி அவருக்கு பொன்னாடை போர்த்தி நமது தமிழரின் முறைப்படி வரவேற்பினை கொடுத்து அசத்தியுள்ளார்.
திருமணத்திற்கு அவரது கையால் திருமாங்கல்யம் எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைக்கும் காட்சியை பார்க்கும் பொழுது அனைவரின் மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சம்பளத்திற்காக தான் வெளிநாட்டில் பணிபுரிகின்றோம் என்று நாம் அனைவரும் நினைத்தாலும் இதுபோன்று தனது தொழிலாளிகளை மனதார கொண்டாடும் முதலாளிகள் நினைக்கும்பொழுது சிங்கப்பூரில் பணிபுரிவது ஒர்த் தான் என்று நினைக்க வைக்கின்றது.