TamilSaaga

சிங்கப்பூர் TOTO லாட்டரி.. நேற்று (அக்.31) நடந்த குலுக்கலில் 3 பேருக்கு தலா 69 லட்சம் பரிசு! 16 கோடி போனாலும் 69 லட்சம் என்ன சும்மாவா!

சிங்கப்பூர் TOTO லாட்டரியில் இந்த வாரத்தின் முதல் குலுக்கல் நேற்று (அக்.31) நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு இதற்கான குலுக்கல் நடைபெற்றது.

இதில், Group 1 எனப்படும் முதல் பரிசாக $ 2,848,740 சிங்கப்பூர் டாலர் அறிவிக்கப்பட்டது. அதாவது, இந்திய மதிப்பில் பதினாறரை கோடிக்கும் மேல்.

எனினும், இந்த பரிசு யாருக்கும் கிடைக்கவில்லை.

Group 1 Winning Numbers

41417252949

அதேசமயம் Group 2 எனப்படும் இரண்டாவது பரிசான $119,405 டாலர்கள் தொகையை 3 பேர் வென்றுள்ளனர். இந்திய மதிப்பில் அறுபத்தி ஒன்பதே முக்கால் லட்சம் தொகையை மூவரும் தங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர்.

குலுக்கலில் பரிசு வென்ற அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள். இதையடுத்து, இந்த வாரத்தின் இரண்டாவது குலுக்கல் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது. இதில், முதல் பரிசாக, $4,500,000 சிங்கப்பூர் டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், Group 1 எனப்படும் மொத்த பரிசுத் தொகை Rounding காரணமாக வேறுபடலாம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts