TamilSaaga

சிங்கப்பூரில் Dependent Pass (DP) யாருக்கெல்லாம் கிடைக்கும்? DP -ல் இருந்தால் வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்?

நீங்கள் சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் தற்போது உங்களுடைய குடும்பத்தினரையும் சிங்கப்பூருக்கு வரவழைக்க எண்ணுகிறீர்கள் என்றால் இதோ சிங்கப்பூர் அரசு உருவாக்கி இருக்கும் திட்டம்தான் டிப்பென்டென்ட் பாஸ் திட்டம். வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து வேலை செய்பவர்கள் தங்களுடைய குடும்பத்தினரை பிரிந்து வந்து வேலை செய்கிறார்கள். அவர்களை அவர்களுடைய குடும்பத்தினரோடு சேர்த்து வைக்க இந்த டிப்பென்டென்ட் பாஸ் திட்டம் பெரிதும் உதவும்.

சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் ஏதேனும் ஒரு பாசை பெற்று அதன் மூலம் அவர்களுடைய தொழிலை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கு வேலை செய்பவர்களுக்கு, படிக்க வருபவர்களுக்கு மற்றும் பயிற்சி பெற வருபவர்களுக்கு என்று தனித்தனியாக பாஸ் கொடுக்கப்படுகிறது. வேலை நிமித்தமாக சிங்கப்பூருக்கு வருபவர்கள் மட்டுமே இந்த டிபெண்டன்ட் விசா பெற முடியும். படிக்க மற்றும் பயிற்சி பெற வருபவர்கள் DP பெற இயலாது. ஒவ்வொரு S PASS மற்றும் EP பெற்றவர்கள் DP வாங்குவதற்கு விண்ணப்பிக்கலாம். DP பெற்றவர்கள் சிங்கப்பூருக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம் போகலாம். உங்களுக்கு என்ன தனியாக Pass ஏதும் பெறத் தேவையில்லை. நீங்கள் பெற்ற DP வைத்து உங்களால் சுதந்திரமாக சிங்கப்பூரில் வாழ முடியும். ஆனால் நீங்கள் யாருடைய பாசை வைத்து DP வாங்கினீர்களோ அவர்கள் சிங்கப்பூரில் இருக்கும் வரை மட்டுமே இந்த DP பயன்படுத்த முடியும்.

ஒவ்வொரு EP மற்றும் S PASS பெற்றவர்களும் DP விண்ணப்பிக்கலாம் ஆனால் அதற்கு சில எலிஜிபிலிட்டி இருக்கிறது. இந்த ஏஜிபிலிட்டியை சிங்கப்பூர் அரசின் MOM அமைப்பு வரையறுத்துள்ளது. அது என்ன என்ன எலிஜிபிலிட்டி என்று பார்க்கலாம். நீங்கள் EP அல்லது S PASS பெற்றவராக இருக்க வேண்டும். உங்களுடைய மாத வருமானம் குறைந்த பட்சம் SGD 6000 ஆக இருக்க வேண்டும். உங்களுடைய குடும்பத்தினர் சிங்கப்பூருக்கு வருவதற்கு நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் ஸ்பான்சர் செய்ய வேண்டும் ( ஒப்புதல் அளிக்க வேண்டும்).

யாரை DP மூலம் சிங்கப்பூருக்கு அழைத்து வரலாம்? சிங்கப்பூர் அரசின் MOM அமைப்பு, தொழிலாளர்களை அவர்களுடைய குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கும் பொருட்டு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியதால், தொழிலாளர்கள் அவர்களுடைய நேரடி குடும்பமாக கருதப்படுபவர்களை அழைத்து வரலாம். நேரடி குடும்பமாக கருதப்படுபவர்கள் என்றால் தொழிலாளர்களின் மனைவி/கணவன், பிள்ளைகள் , பெற்றோர்கள் ஆகியவர்கள்.

இது குறித்து இன்னும் விரிவாக பார்க்கலாம், EP மற்றும் S PASS பெற்றவர்கள் தங்களுடைய மனைவி மற்றும் திருமணமாகாத 21 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள். சிங்கப்பூர் சிட்டிசன் அல்லது PR பெற்றவர்கள் அவர்களுடைய மனைவி மற்றும் திருமணமாகாத 21 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள். திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்பவர்கள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகள், மற்றும் திருமணம் ஆகாமல் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளை இந்த DP மூலம் சிங்கப்பூருக்கு அழைத்து வரலாம். ஒருவேளை குழந்தைகள் ஊனமுற்றவராக இருந்தால் 21 வயதுக்கு மேல் உள்ளவர்களும் DP -ஐ பயன்படுத்தி சிங்கப்பூருக்கு வரலாம்.

உங்களுக்கு மேலும் இதில் சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் MOM-ன் இணையதளத்தில் சென்று பார்க்கவும். அதில் உங்களுடைய சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கலாம். நீங்கள் என்ன நிலையில் இருக்கிறீர்கள் உங்களால் DP பெற முடியுமா என்பதை அங்கே தெரிந்து கொள்ளலாம். அங்கே உங்களுக்கு மிக சரியான தகவல்கள் துல்லியமாக கிடைக்கும்.

நீங்கள், உங்களுக்கு EP அல்லது S PASS பெற்றவுடன், DP விண்ணப்பிக்க முடியும். DP -யை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நீங்க விண்ணப்பித்ததில் இருந்து குறைந்த பட்சம் 2-3 வாரங்கள் ஆகும். அதன் பின்னர் நீங்கள் MOM இணையதளத்தில் உங்களுடைய அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் பார்க்கலாம். நீங்கள் DP பெற்று சிங்கப்பூரில் வசிக்கிறீர்கள் என்றால் உங்களால் சிங்கப்பூரில் வேலை பெற முடியும். LOC என்னும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நீங்கள் சிங்கப்பூரில் வேலை தேடலாம். வேலை கிடைத்தவுடன் அந்த வேலையை தொடர்ந்து செய்யவும் இந்த LOC உதவும். அதேபோல் DP பெற்றவர்கள் சிங்கப்பூரின் PR பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். யாருடன் சேர்ந்து DP வாங்கினீர்களோ அவர்களுடன் சேர்ந்து அல்லது தனியாகவும் PR -க்கு விண்ணப்பிக்கலாம்.

உங்களுடைய DP முடிவடையும்போது நீங்கள் புதுப்பித்துக் கொள்ளலாம். அல்லது நீங்கள் யாருடைய S PASS அல்லது EP மூலமாக சிங்கப்பூருக்கு வந்தீர்களோ அவர்களுடைய பாஸ் முடிவடையும்போது உங்களுடைய DP -க்கும் MOM அமைத்துள்ளது கடிதம் வரும். அந்த சமயத்தில் எங்கள் உங்களுடைய DP-யை புதுப்பித்துக் கொள்ளவும். எப்படி DP பெறுவதற்கு நிறைய கண்டிஷன் இருக்கிறதோ அதேபோல் புதுப்பிக்கவும் நிறைய வழிமுறைகள் இருக்கிறது. அதை பாலோ செய்து நீங்கள் உங்களுடைய DP-யை புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஒருவேளை நீங்கள் சிங்கப்பூரை விட்டு வேற நாடுகளுக்கு குடியேற விரும்புகிறீர்கள் என்றால் அந்த சமயம் உங்களுடைய DP -யை கேன்சல் செய்யும் வசதியும் உண்டு. அதை கேன்சல் செய்யவும் MOM -ன் இணையதளத்தில் வசதிகள் உண்டு. அங்கு கூறி இருக்கும் வழிமுறைகளை பாலோ செய்தால் உங்கள் DP-யை எளிதில் கேன்சல் செய்யலாம்.

ஆகவே நண்பர்களே சிங்கப்பூரில் DP பெறுவதற்கான மேற்கூறிய தகவல்கள் போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறோம். இன்னொரு பதிவில் எவ்வாறு DP விண்ணப்பம் அப்ளை செய்ய வேண்டும். என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது பற்றி இன்னும் விரிவாக பார்க்கலாம்.

Related posts