TamilSaaga

உலக நாடுகளை தெறிக்க விடும் மும்பை டு சிங்கப்பூர் சேவை…8100 கிலோமீட்டர் தூரத்தை அசால்ட்டாக இணைக்கும் விஞ்ஞான அதிசயம்!

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நம் கற்பனைக்கு எட்டா வண்ணம் இருக்கும் அனைத்தையும் இன்று கைகளுக்குள் ஸ்மார்ட் போன் மூலம் அடக்கி சாத்தியமாக்கி உள்ளது அறிவியல். 3g 4g என்று தொடங்கி வரிசையாக அனைத்து ஜீக்களையும் நாம் படிப்படியாக அடைந்து வருகின்றோம்.

இந்நிலையில் மற்றும் ஒரு மைல்கல்லாக மும்பையில் இருந்து சிங்கப்பூர் வரை கடலுக்கடியில் பைபர் கேபிள்கள் அமைக்கும் பணிகள் தற்பொழுது மும்மரமாக தொடங்கியுள்ளது என்பது ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் தான்.

இந்தியா தங்களது டேட்டா சேவையினை ஆசிய நாடுகளுக்கு பகிரும் ஒப்பந்தத்தினை ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிலையில் தற்பொழுது மும்பை டு சிங்கப்பூர், 8,100 கிலோமீட்டர் நீளத்திற்கு பைபர் கேபிள்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

தற்பொழுது பைபர் கேபிள் அமைப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் சென்னை பட்டினப்பாக்கம் துறைமுகத்தை வந்து அடைந்துள்ளன. ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனமானது கேபிள் பணியினை மேற்கொண்டுள்ள நிலையில் தற்போது என் டி டி நிறுவனமும் இந்த பணியை அமைப்பதில் இணைந்துள்ளது.

கேபிள்கள் தற்பொழுது இணைக்கப்பட்டு வரும் நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக ராட்சச இயந்திரங்களைக் கொண்டு கடலுக்கு அடியில் கேபிள்களை சிங்கப்பூர் வரை கொண்டு செல்லும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை, சென்னை, மியான்மர், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளை தொடர்ந்து கடைசியாக சிங்கப்பூர் வரை இந்த கேபிள் செல்லும் என தெரிகின்றது.

இந்தத் திட்டம் முழுமை பெறுவதற்கு மொத்தம் 400 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு இந்த திட்டத்திற்கான அனுமதி கிடைத்த நிலையில் இதற்கான பணி தற்பொழுது முடுக்கி விடப்பட்டுள்ளது.

அப்படி என்ன இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு ஆதாயம்? ஏன் இந்த திட்டத்திற்காக இவ்வளவு செலவழிக்க வேண்டும்? என்று யோசித்தால் செயற்கைக்கோள் இல்லாமலேயே நம்மால் அதிவேக இன்டர்நெட்டினை பெற முடியும் என்பதே இந்த திட்டத்தின் சிறப்பம்சம்.

இதன் மூலம் தற்பொழுது நாம் அனுபவிக்கும் இணைய சேவையினை விட பல மடங்கு துரிதமான இன்டர்நெட் சேவையினை பெறுவதனால் தகவல் தொழில்நுட்பத்தில் மற்றொரு மணிமகுடமாக இது அமையும். மேலும் மக்களுக்கு தற்பொழுது உள்ள சேவையினை விட மிகவும் மலிவான விலையில் அதே நேரம் நம்பகத்தன்மையுடன் சேவையினை வழங்க முடியும்.

கடல் நீரில் உள்ள உப்பினால் இந்த கேபிள்கள் சேதம் கிடையாது. மேலும் கடல் மூழ்கிக் கப்பல்கள், நங்கூரம், கடல் கொந்தளிப்புகள், கடலடி பூகம்பங்கள் போன்றவற்றால் கூட பாதிக்கப்படாது.

பெரிய சுறா மீன்கள் கடித்தால் கூட இந்த கேபிலினை ஒன்றும் செய்ய முடியாது அந்த அளவிற்கு பாதுகாப்புடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாலி எத்திலின் மயிலார் டேப் மூலம் நுழைக்கப்பட்ட எஃகு கம்பிகள், தண்ணீர் புகாத அலுமினிய கம்பி, பாலிகார்பனேட், செம்பு அல்லது அலுமினிய குழாய்கள், பெட்ரோலிய ஜெல்லி என்று எட்டு லேயர்களை கொண்டு இந்த கேபிள்கள் வலிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

1950 ஆம் ஆண்டு முதன்முறையாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே தந்தி சேவையினை வழங்குவதற்காக கடலுக்கு அடியில் கேபிள் அமைக்கப்பட்டது. மேலும் இயற்கை எரிவாய்வு வழங்குவதற்காக 2013ஆம் ஆண்டு முதல் முதலாக இந்தியாவில் இந்த சேவை தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாபெரும் தொழில்நுட்ப சாதனைக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி வெற்றி பெறும் நிலையில் நம் நாடு டேட்டா சேவையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் என்பதில் சந்தேகம் இல்லை.
கடலுக்குள் தொழில்நுட்பத்தை புகுத்தும் இந்தியாவின் அறிவியல் அறிவு… உலக நாடுகள் ஆச்சரியப்படும் மும்பை to சிங்கப்பூர் 8100 கிலோமீட்டர் கடலடி கேபிள்…

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நம் கற்பனைக்கு எட்டா வண்ணம் இருக்கும் அனைத்தையும் இன்று கைகளுக்குள் ஸ்மார்ட் போன் மூலம் அடக்கி சாத்தியமாக்கி உள்ளது அறிவியல். 3g 4g என்று தொடங்கி வரிசையாக அனைத்து ஜீக்களையும் நாம் படிப்படியாக அடைந்து வருகின்றோம்.

இந்நிலையில் மற்றும் ஒரு மைல்கல்லாக மும்பையில் இருந்து சிங்கப்பூர் வரை கடலுக்கடியில் பைபர் கேபிள்கள் அமைக்கும் பணிகள் தற்பொழுது மும்மரமாக தொடங்கியுள்ளது என்பது ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் தான்.

இந்தியா தங்களது டேட்டா சேவையினை ஆசிய நாடுகளுக்கு பகிரும் ஒப்பந்தத்தினை ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிலையில் தற்பொழுது மும்பை டு சிங்கப்பூர், 8,100 கிலோமீட்டர் நீளத்திற்கு பைபர் கேபிள்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

தற்பொழுது பைபர் கேபிள் அமைப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் சென்னை பட்டினப்பாக்கம் துறைமுகத்தை வந்து அடைந்துள்ளன. ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனமானது கேபிள் பணியினை மேற்கொண்டுள்ள நிலையில் தற்போது என் டி டி நிறுவனமும் இந்த பணியை அமைப்பதில் இணைந்துள்ளது.

கேபிள்கள் தற்பொழுது இணைக்கப்பட்டு வரும் நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக ராட்சச இயந்திரங்களைக் கொண்டு கடலுக்கு அடியில் கேபிள்களை சிங்கப்பூர் வரை கொண்டு செல்லும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை, சென்னை, மியான்மர், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளை தொடர்ந்து கடைசியாக சிங்கப்பூர் வரை இந்த கேபிள் செல்லும் என தெரிகின்றது.

இந்தத் திட்டம் முழுமை பெறுவதற்கு மொத்தம் 400 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு இந்த திட்டத்திற்கான அனுமதி கிடைத்த நிலையில் இதற்கான பணி தற்பொழுது முடுக்கி விடப்பட்டுள்ளது.

அப்படி என்ன இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு ஆதாயம்? ஏன் இந்த திட்டத்திற்காக இவ்வளவு செலவழிக்க வேண்டும்? என்று யோசித்தால் செயற்கைக்கோள் இல்லாமலேயே நம்மால் அதிவேக இன்டர்நெட்டினை பெற முடியும் என்பதே இந்த திட்டத்தின் சிறப்பம்சம்.

இதன் மூலம் தற்பொழுது நாம் அனுபவிக்கும் இணைய சேவையினை விட பல மடங்கு துரிதமான இன்டர்நெட் சேவையினை பெறுவதனால் தகவல் தொழில்நுட்பத்தில் மற்றொரு மணிமகுடமாக இது அமையும். மேலும் மக்களுக்கு தற்பொழுது உள்ள சேவையினை விட மிகவும் மலிவான விலையில் அதே நேரம் நம்பகத்தன்மையுடன் சேவையினை வழங்க முடியும்.

கடல் நீரில் உள்ள உப்பினால் இந்த கேபிள்கள் சேதம் கிடையாது. மேலும் கடல் மூழ்கிக் கப்பல்கள், நங்கூரம், கடல் கொந்தளிப்புகள், கடலடி பூகம்பங்கள் போன்றவற்றால் கூட பாதிக்கப்படாது.

பெரிய சுறா மீன்கள் கடித்தால் கூட இந்த கேபிலினை ஒன்றும் செய்ய முடியாது அந்த அளவிற்கு பாதுகாப்புடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாலி எத்திலின் மயிலார் டேப் மூலம் நுழைக்கப்பட்ட எஃகு கம்பிகள், தண்ணீர் புகாத அலுமினிய கம்பி, பாலிகார்பனேட், செம்பு அல்லது அலுமினிய குழாய்கள், பெட்ரோலிய ஜெல்லி என்று எட்டு லேயர்களை கொண்டு இந்த கேபிள்கள் வலிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

1950 ஆம் ஆண்டு முதன்முறையாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே தந்தி சேவையினை வழங்குவதற்காக கடலுக்கு அடியில் கேபிள் அமைக்கப்பட்டது. மேலும் இயற்கை எரிவாய்வு வழங்குவதற்காக 2013ஆம் ஆண்டு முதல் முதலாக இந்தியாவில் இந்த சேவை தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாபெரும் தொழில்நுட்ப சாதனைக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி வெற்றி பெறும் நிலையில் நம் நாடு டேட்டா சேவையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் என்பதில் சந்தேகம் இல்லை

Related posts