TamilSaaga

ஒன்றரை வருட சம்பளத்தினை அலேக்காக ஒரே நாளில் பரிசாக தூக்கிய இளைஞர்…சிங்கப்பூர் இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்ட காற்று!

கைமேல் ஒன்றுக்கு இரண்டு டிகிரி என்று வைத்திருந்தாலும் படித்த வேலைக்கேற்ற சம்பளம் இல்லாமல் வெளிநாடு வேலைகளுக்கு முயற்சி செய்து அங்கு வேலை செய்யும் இளைஞர்கள் நம் நாட்டில் ஏராளம்.

ஒரு சிலருக்கு தான் அமெரிக்கா கனடா போன்ற வாய்ப்புகள் அமையும் என்ற பட்சத்தில் பத்தில் ஒன்பது இளைஞர்கள் வேலை செய்யும் வெளிநாடு என்றால் அது சிங்கப்பூர் தான்.

நம் தமிழர்கள் அங்கு ஏராளம், நம் கலாச்சாரத்திற்கு ஓரளவு ஒத்து போகும் மேலும் அடிக்கடி சொந்த ஊர் வந்து செல்லலாம் என்ற கனவிலேயே ஏராளமான இளைஞர்களின் தேர்வாக சிங்கப்பூர் நாடு உள்ளது.

ஆனால் நம் நாட்டினைப் போல் அல்லாமல் காலையில் 5:00 மணிக்கு பெரும் டீயை மட்டும் குடித்துக் கொண்டு வேலைக்கு சென்று இரவு 10 மணிக்கு வீடு திரும்பி தூங்கி எழுந்து என்று மிஷின் போல் வேலை பார்த்து ஒவ்வொரு வெள்ளியனையும் அங்கு சம்பாதித்து வருகின்றனர் என்பதே உண்மை.

அப்படி சிறுக சிறுக சம்பாதித்து சொந்த ஊரில் வீடு கட்டி அங்கு பெருமையாக தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதே பல இளைஞர்கள் கனவு. ஆனால் இந்தியாவை சேர்ந்த இளைஞருக்கு அது ஒரே நாளில் கைகூடி இருக்கின்றது.

ஆம் ஒன்றை ஆண்டு சம்பளத்தினை ஒரே நாளில் பரிசாக தட்டிச் சென்றிருக்கின்றார் இந்தியர். இந்தியா,வைச் சேர்ந்த ஆறுமுகம் என்றவர் சிங்கப்பூரின் பாலிஷம் இன்ஜினியரிங் என்ற நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் 18,888 வெள்ளி ரூபாய் பரிசு தொகையாக வென்றுள்ளார்.

தன் வெற்றி பெற்றதை அறிந்து செல்வம் மண்டியிட்டு கண்ணீர் சிந்தும் காட்சி காண்பவர் அனைவரையும் கரைய வைத்தது. இந்த வீடியோ தற்பொழுது டிக் டாக் இல் வேகமாக பரவி வருகின்றது.

பிரபலமான தென்கொரியா நாடகத்தினை மையமாக வைத்து நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பல சவால்களை படிப்படியாக வென்று கடைசியில் வெல்ல வேண்டும் என்று கேம் அமைக்கப்பட்டு இருந்தது.

ஆனால் செல்வம் அனைத்து போட்டிகளையும் வரிசையாக வென்று கடைசியாக கிட்டத்தட்ட 12 லட்சம் ரூபாய் இந்திய ரூபாய் மதிப்பினை பரிசாக வென்று குவித்துள்ளார்.

இதை தொடர்ந்து அவர் கூறும் பொழுது இந்த தொகையினை வைத்து நான் ஏற்கனவே இந்தியாவில் வாங்கி வைத்திருக்கும் நிலத்தில் சொந்தமாக வீடு கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த தொகையானது எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பெரிய வாய்ப்பு என்று மகிழ்ச்சியுடன் தனது வெற்றிகளை வெளிப்படுத்தினார்.

Related posts