ஏற்கனவே சுமார் இரண்டு ஆண்டு காலமாக நம்மை அச்சுறுத்தி வரும் இந்த பெருந்தொற்று நிலையை இன்னும் சரியாகாது இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்த Delta, Omicron போன்ற புதிய மாறுபாடுகள் தினமும் தோன்றி நம்மை மேலும் இன்னலுக்கு ஆளாகி வருகிறது என்றே கூறலாம். இந்த உருமாறிய omicron புதிய வகை வைரஸ் அதிவேகத்தில் பரவும் என்று நிபுணர்கள் கூறுவதால் பல்வேறு உலக நாடுகள் மீண்டும் பாதுகாப்பு கருதி தங்களை எல்லைகளை மூட தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவிலும் இதற்கான பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படியுங்கள் : ஆண்டு இறுதி விடுமுறைத் திட்டங்களில் மாற்றங்களுக்குத் தயாராக இருங்கள்
சர்வதேச எல்லைகள் இதுவரை மூடப்படாமல் இருக்கும் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை காலை சிங்கப்பூரிலிருந்து வந்த இன்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரையும் முறையாக பரிசோதனை செய்து அவர்களுடைய முடிவுகள் வெளிவந்த பின்பு மட்டுமே அவர்களை ஊருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் அவர்களை அழைக்க வரும் உறவினர்கள் சுமார் 5 மணி நேரம் தாமதமாக வருமாறு அறிவிக்கப்பட்டனர். சிங்கப்பூர் உள்ளிட்ட Red List நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை செய்து அவர்களுக்கான பரிசோதனை முடிவு வந்த பின்னரே அவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது ஒருபுறமிருக்க நேற்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று இரவு 9 மணிக்கு புறப்படாமல் இரவு 1 மணிக்கு புறப்பட்டதாக தமிழ் சாகா சிங்கப்பூருக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. மலேசியாவில் இருந்து திருச்சி நோக்கி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தாமதமாக வந்தது தான் இந்த திருச்சியில் இருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் சிங்கப்பூரில் இருந்து இன்று காலை 6 மணிக்கு திருச்சி புறப்பட வேண்டிய ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமான சேவையிலும் தாமதம் இருப்பதாக அந்த நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இது அவ்வப்போது விமான நிலையங்களில் ஏற்படும் சிறு தடங்கல் தான் என்றபோதும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இதுகுறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டால் அவர்கள் அதற்கு தகுந்தார்போல் முன்னேற்பாடுகளை செய்துகொள்வார்கள் என்று பயணிகள் தங்களுடைய கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்.
நேற்று ஏற்பட்ட இந்த தாமதத்தால் திருச்சி விமான நிலையத்தில் சுமார் 200 பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.