TamilSaaga

சிங்கப்பூர், ஆண்டு இறுதி விடுமுறைத் திட்டங்களில் மாற்றங்களுக்குத் தயாராக இருங்கள் : தொழில்துறையின் எச்சரிக்கை

உலகம் முழுவதும் தற்போது பரவிய வரும் ஓமிக்ரான் மாறுபாடு சிங்கப்பூரில் உள்ள சிலருக்கு அவர்களின் ஆண்டு இறுதி விடுமுறைத் திட்டங்களைத் தவிர்க்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. தற்போது உள்ள நிலைமை விரைவாக மாறுவதற்குத் தயாராக இருக்குமாறு தொழில்துறையினர் பயணிகளை எச்சரிக்கின்றனர். கடந்த புதன்கிழமை (டிசம்பர் 1), கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட உள்வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்துதல் விதிகளை வெள்ளிக்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் தீவிரமடையும் கட்டுப்பாடுகள்

அதே நேரத்தில் கடந்த வியாழன் அன்று, சிங்கப்பூரில் உள்ள கொரியா குடியரசின் தூதரகம் இரு நாடுகளுக்கும் இடையிலான தடுப்பூசி பயண பாதை (VTL) ஏற்பாடு, தற்போது எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் என்று கூறியதும் நினைவுகூரத்தக்கது. இந்நிலையில் புதன்கிழமை வெளியான தென் கொரியாவின் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த சில வாடிக்கையாளர்கள் தங்களுக்கு இதுகுறித்து அறிய அழைப்பு விடுத்ததாக சிங்கப்பூரை சேர்ந்த இரண்டு பயண முகமைகள் ஊடக அறிவிப்பில் தெரிவித்தன.

சான் பிரதர்ஸின் மூத்த சந்தைப்படுத்தல் தகவல் தொடர்பு மேலாளரான திரு. ஜெரேமியா வோங், ஐரோப்பாவிற்குச் செல்லும் வாடிக்கையாளர்களிடமிருந்தும் பயண நிறுவனம் பல விசாரணைகளைப் பெற்றுள்ளது என்றார். இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் சுற்றுப்பயணத்தை ஒத்திவைக்கலாம், அல்லது தங்கள் முன்பதிவை வேறொரு VTL இலக்குக்கு மாற்றலாம் அல்லது VTL நாடுகளில் இறுக்கமான கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டால் முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், CTC டிராவல் வாடிக்கையாளர்கள் தங்கள் பயணங்களை ஒத்திவைப்பது அல்லது ரத்து செய்வது குறித்து பரிசீலிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது என்று ஒரு செய்தித் தொடர்பாளர் ST-க்கு தெரிவித்தார். சிங்கப்பூரில் இருந்து வெளியூர் செல்லும் பயணங்கள் ரத்து செய்யப்பட்ட நாடுகளில் ஆஸ்திரேலியா, தென் கொரியா, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை அடங்கும் என்றும் கூறப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts