TamilSaaga

சிங்கப்பூரில் SHN காலகட்டத்தில் தடையை மீறி பாதுகாப்பு பணியாளராக பணிபுரிந்த நபர் – 7 வார சிறை

சிங்கப்பூரில் கடந்த மார்ச் 2020-ல் இந்தோனேஷியா நாட்டில் உள்ள பாடாமிலிருந்து சிங்கப்பூர் திரும்பியபோது, ஒருவர் தனது தங்குமிட அறிவிப்பை (SHN) மீறி, அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு 13 நாட்கள் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றினார் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றது. 41 வயதான ரோஸ்மான் அப்துல் ரஹ்மான், சிங்கப்பூர் வந்திறங்கியபோது தனது வளர்ப்பு சகோதரியின் முகவரியை விமான நிலைய அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தாலும், தனது வளர்ப்பு சகோதரியுடன் நல்லுறவில் இல்லாத நிலையில் அவர் அந்த பெண்ணோடு தாங்கவில்ல.

இதையும் படியுங்கள் : திருச்சி – சிங்கப்பூர் – 5 மணிநேரம் தாமதமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்

மாறாக அவருக்கு தங்குவதற்கு இடம் இல்லாததால் கார் பார்க்கிங் மற்றும் நடைபாதையில் உறங்கியுள்ளார். இந்நிலையில் அந்த சிங்கப்பூரருக்கு நோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் ஏழு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குற்றத்தை செய்தபோது அவருக்கு பெருந்தொற்று பாதிப்பு இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக ரோஸ்மானின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, வழக்கு டிசம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அவர் பணி நிமித்தமாக மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே அடிக்கடி பயணம் செய்ததாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு மார்ச் 20ம் தேதி, அவர் தனது இந்தோனேசிய மனைவியை வழிஅனுப்பிட்டு, இந்தோனேசியாவின் படாமிலிருந்து படகில் சிங்கப்பூர் குடியரசுக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. பெருந்தொற்று பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, மார்ச் 16 முதல் சிங்கப்பூருக்கு வரும் எவருக்கும் தேவைப்படும் தனது 14 நாள் SHNஐ அங்கீகரிப்பதற்காக அவர் ஒரு படிவத்தில் கையெழுத்திட்டார். ரோஸ்மேன் ஆரம்பத்தில் தனது SHNனை அளிக்க தயங்கினார், இதனால் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA) அதிகாரிகளின் பரிந்துரையையின்படி அவர் பாத்தாமிற்கு திரும்பினார்.

பின்னர் அவர் புங்கோலில் உள்ள தனது வளர்ப்பு சகோதரியின் முகவரியைக் கொடுத்தார், ஆனால் அவர் தனது இடத்தில் தங்குவதில் சிரமம் இருப்பதாக அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை என்று வழக்குத் தொடரப்பட்டது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts