சிங்கப்பூரில் கடந்த்த வியாழக்கிழமை இரவு (செப்டம்பர் 30) அன்று செராங்கூனில் உள்ள ஒரு பரபரப்பான ரவுண்டானாவில் ஒரு சைக்கிள் ஓட்டுநர் மற்ற வாகன ஓட்டிகளைத் துன்புறுத்தியதை முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரின் செராங்கூன் கார்டன் வே ரவுண்டானாவில் சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் ஸ்டாம்பர் டான் என்பவர் தான் நேரில் பார்த்து ஒரு வீடியோவைப் அவரது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
வெளியான அந்த வீடியோவில், ரௌண்டானாவில் போகும் ஒரு காரை பின்தொடர்ந்து செல்லும் ஒரு சைக்கிள் ஓட்டி. பலத்த சத்தத்துடன் ரௌண்டானாவில் அந்த காரை பின்தொடர்ந்து செல்கின்றார். ஒரு கட்டத்தில் பாலமாக அந்த காரை அவர் தாக்குகிறார். இறுதியில் அவர் சில தகாத வார்த்தைகளை பேசுவதாகவும் அந்த காணொளியில் உள்ளது. ஆரம்பத்தில் இந்த காணொளியை பார்ப்பவர்கள் அனைவரும் அந்த சைக்கிள் ஓட்டுநர் ஏதோ ஒரு சர்ச்சையில் அந்த கார் டிரைவரை எதிர்கொள்ள முயன்றதாக நாம் நினைக்க தோன்றுகிறது.
STOMP முகநூல் பதிவில் வெளியிட்ட காணொளி : Video Curtesy – STOMP
ஆனால் அவர் அந்த காரை கடந்து சென்ற பிறகு அங்கு செல்லும் அனைத்து வாகங்களிடமும் அவ்வாறு செய்தது தெரியவந்தது. “இது ஒரு ரவுண்டானா என்பதால் மிகவும் ஆபத்தான பகுதியாக உள்ளது. சீரற்ற முறையில் வாகனங்களுக்குப் பின்னால் செல்வதன் மூலம் அவர் எளிதில் காரில் அடிபடுவார்” என்று பலரும் கூறுகின்றனர்.
அந்த ஆடவர் ஏன் அவ்வாறு செய்தார் என்பது தெரியவில்லை. அந்த ஆடவர் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டதாக தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.