சிங்கப்பூரில் 51 வயதான ஒருவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 39 வயது பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 12.55 மணியளவில் ஆங் மோ கியோ அவென்யூ 3ல் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் தகராறு நடப்பது தொடர்பாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த இடத்தில் ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும், பல காயங்களுடன், குடியிருப்பு பிரிவுக்கு வெளியே கண்டனர், உடனடியாக அந்த இருவரும் அருகில் இருந்த மருத்துமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இருப்பினும் அங்கு அந்த ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த பெண், வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அந்த பெண் தான் கொலை செய்தாரா என்பது குறித்து தற்போது விசாரணை நடந்து வருகின்றது.