சிங்கப்பூர் மற்றும் இந்தியா இடையே தற்போது அமைக்கப்பட்ட Travel Bubble மூலம் மீண்டும் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே மீண்டும் விமான சேவையை அளிக்கவுள்ளது Scoot நிறுவனம். இதற்கான அறிவிப்பை தனது முகநூல் பகுதியில் வெளியிட்டுள்ளது. வரும் 30 நவம்பர் முதல் இந்த சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக அது தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : “இந்தியா – சிங்கப்பூர்” : VTL மற்றும் VTL அல்லாத சேவைகளை வழங்க நாங்க “Ready
திருச்சி, ஹைதெராபாத் மற்றும் அம்ரிஸ்டர் ஆகிய நகரங்களில் இருந்து சேவைகள் வழங்க வாய்ப்புள்ளது என்று Scoot தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த சேவைகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது Scoot.
சென்னை, டெல்லி மற்றும் மும்பையில் இருந்து தலா இரண்டு தினசரி விமானங்களுடன் திட்டமிடப்பட்ட வணிக சேவைகளை மறுதொடக்கம் செய்ய சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்திய அரசு. தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் நாடு திரும்பும் பணி மட்டுமே வந்த பாரத் திட்டத்தின் கீழ் இருநாடுகளுக்கு இடையே சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வரும் 29ம் தேதி முதல் சிங்கப்பூர் தனது VTL சேவைகளை இந்தியாவிற்கு திறக்கவுள்ளது என்பதும் நினைவுகூரத்தக்கது. இந்த சேவை தொடங்கப்பட்டது இந்தியர்கள் தனிமைப்படுத்துதல் இன்றி சிங்கப்பூருக்குள் நுழைய வழிபிறக்கும் என்று பலரின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தியோகபூர்வ பயணமாக சிங்கப்பூர் வந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தனது பணிகளை முடித்த மீண்டும் இந்தியா திரும்பினார்.
இந்த சந்திப்பின்போது போக்குவரத்துக்கு அமைச்சர் ஈஸ்வரன், சுகாதார அமைச்சர் ஓங் யீ குங், வர்த்தக அமைச்சர் லாரன்ஸ் வோங், வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன், சட்ட அமைச்சர் சண்முகன் மற்றும் நமது பிரதமர் லீ ஆகியோரை சந்தித்து இரு நாடு உறவு குறித்து பல விஷயங்களை பேசினார். குறிப்பாக இருநாடுகளிடையே மீண்டும் வர்த்தக விமானங்களை இயக்குவது குறித்து அவர் அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.