TamilSaaga

“சுமார் 450 நாட்களுக்கு பிறகு தொடங்கிய சேவை” : திருச்சி – சிங்கப்பூர் இருமார்கமாக 30 விமானங்களை இயக்கும் Scoot

சுமார் 450 நாட்களுக்கு பிறகு மீண்டும் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து தனது சேவைகளை தொடங்கியுள்ளது Scoot நிறுவனம். சிங்கப்பூர் மற்றும் இந்தியா இடையே தற்போது அமைக்கப்பட்ட Travel Bubble மூலம் மீண்டும் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே மீண்டும் விமான சேவையை அளிக்கவுள்ளது Scoot. இதற்கான அறிவிப்பை தனது முகநூல் பகுதியில் வெளியிட்டுள்ளது. வரும் 30 நவம்பர் முதல் இந்த சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக அது தெரிவித்துள்ளது.

முழு Scoot விமான பட்டியலையும் காண..

மேலும் விமான பட்டியலையும் தற்போது வெளியிட்டுள்ளது Scoot நிறுவனம், டிசம்பர் மாதம் 2ம் தொடங்கி 3,5,9,10,12,16,17,19,23,24,26,30 மற்றும் டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் சிங்கப்பூர் – திருச்சி மற்றும் திருச்சி – சிங்கப்பூர் என்று இருமார்கமாக இந்த விமானங்கள் இயக்கப்படவுள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இந்தியா – சிங்கப்பூர்” : VTL மற்றும் VTL அல்லாத சேவைகளை வழங்க நாங்க “Ready” – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

ஆனால் இந்த பயணங்களுக்கான டிக்கெட் விலை குறித்து எந்தவித தகவலும் scoot நிறுவனம் தெரிவிக்கவில்லை. விமான பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் விரைந்த புக்கிங் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts