எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் வாழ்க்கையில் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பணம் என்பது தான் நம்மில் பெரும்பாலானோர் நினைக்கும் விஷயம். இது உண்மையில் எந்த அளவிற்கு உண்மை என்பதை தான் ஜெனிவாவை மையமாகக் கொண்ட தனியார் வங்கி ஆய்வாக நடத்தியுள்ளது. இதில் பசிபிக் வட்டாரத்தில் சுற்றியுள்ள பணக்காரர்களில் மகிழ்ச்சியாக உள்ளவர்கள் யாரு என்பது குறித்து நடத்திய ஆய்வில் சிங்கப்பூரை சேர்ந்த பணக்காரர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்ன தெரிய வந்துள்ளது.
இது குறித்து நவம்பர் இரண்டாம் தேதி வெளியிடப்பட்ட ஆய்வில் வேலை மற்றும் வாழ்க்கை இரண்டையும் சமநிலையாக்கி யார் மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்பது குறித்து வெளியிடப்பட்ட தரவரிசையில் 7 2.7 சதவீதத்துடன் தாய்லாந்து நாடு முதலிடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. சிங்கப்பூரைச் சேர்ந்த பணக்காரர்கள் ஆபீஸில் அதிக நேரம் செலவிடுவதனால் மகிழ்ச்சியில் பின்தங்கி உள்ளனர் என தெரியவந்துள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த நபர்கள் வாரத்திற்கு சுமார் 45 மணி நேரம் செலவிடுகின்றனர் இது மற்ற நாடுகளை ஒப்பிடும் பொழுது மிகவும் அதிகப்படியான நேரம் எனவும் தெரியவந்துள்ளது. பசிபிக் வட்டாரங்களை சுற்றியுள்ள இரு நாடுகளில் உள்ள 460-க்கும் மேற்பட்ட அவர்களிடம் நடத்தி ஆய்வில் இந்த முடிவானது வெளியாகியுள்ளது. மேலும் இனிவரும் இளம் தலைமுறையினர் இந்த விதிமுறைகளில் இருந்து விலகி மகிழ்ச்சிக்கு இடம் கொடுப்பார் எனவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.