கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பெருந்தொற்று பன்னாட்டு விமான பயணத்தை பெரிய அளவில் முடக்கி வந்த நிலையில் தற்போது உலக அளவில் விமானங்கள் ஓரளவுக்கு திறன்பட இயங்கி வருகின்றனர். குறிப்பாக நமது சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கு பல விமான சேவை நிறுவனங்கள் தங்களுடைய சேவைகளை அளித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக NON VTL சேவை மூலம் இந்தியாவின் முக்கிய 5 நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகின்றது Scoot விமான சேவை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற பிப்ரவரி மாதம் மட்டும் 20 விமானங்களை திருச்சி மற்றும் சிங்கப்பூர் மார்க்கமாக Scoot இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் 15 பிப்ரவரி 2022 முதல் 18 மார்ச் 2022 வரை திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வரை இயக்கப்படும் Scoot நிறுவனத்தின் Non VTL சேவைகளுக்கு 7கிலோ Hand Luggage சேர்த்து ஒரு வழி பயணத்திற்கு 5800 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்று அண்மையில் Scoot அறிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது. தற்போது உள்ள இந்த Omicron சூழலில் தமிழக்தில் இருந்து சிங்கப்பூருக்கு மீகக்குறைந்த விலையில் விமான சேவைகளை வழங்கி வருகின்றது Fly Scoot.
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள புதிய update என்னவென்றால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் Vistara விமான சேவை நிறுவனங்கள் தமிழகம் மற்றும் சிங்கப்பூர் இடையே இன்னும் ஏப்ரல் மாத டிக்கெட்களை திறக்காத நிலையில் Scoot நிறுவனம் மார்ச் 2022ஐ தொடர்ந்து தற்போது ஏப்ரல் மாதத்திற்கான விமான டிக்கெட்களை திறந்துள்ளது. இதற்கான விற்பனையும் தொடர்ந்து நடந்து வருகின்றது, Non VTL சேவைகளுக்கு 7கிலோ Hand Luggage சேர்த்து ஒரு வழி பயணத்திற்கு 8800 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
Scoot நிறுவனம் சிங்கப்பூரில் இருந்து திருச்சி, கோவை ஆகிய இரு தமிழக நகரங்களுக்கு சேவைகளை வழங்கு வருகின்றது. அதேபோல தற்போது Scoot விமான சேவையில் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு அதை cancel செய்யும் வசதி இல்லை என்று கூறப்படுகிறது.
News Source
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007