Samsonite… இந்த நிறுவனத்தின் பெயரை உங்களில் சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். அமெரிக்காவின் பிரபல luggage தயாரிப்பு நிறுவனமான Samsonite, 1910ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் 2022ம் ஆண்டு நிலவரப்படி, மொத்தம் 14,500 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஆனால், இந்த பழம்பெரும் நிறுவனம், பெருந்தொற்று பாதிப்பு காரணமாக கடுமையான நஷ்டத்தைச் சந்தித்தது. குறிப்பாக, 2020ல் உலகமே லாக் டவுனில் முடங்கியிருந்த போது, கம்பெனி தனது அனைத்துப் பணிகளையும் நிறுத்தி மூடப்பட்டது. பணியாளர்கள் வீட்டில் சும்மாவே இருந்தனர். யாருக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை. அடுத்து என்ன நடக்கப் போகிறது? இந்த நிறுவனத்தின் எதிர்காலம் என்ன? இத்தனை பழமையான நிறுவனத்தின் செயல்பாடு இதோடு முடிவுக்கு வந்துவிடுமா? என்ற பல கேள்விகள், அச்சங்கள் எழுந்தன. இவை அங்கு பணியாற்றிய ஊழியர்களை மனதளவில் மிக மோசமாக பாதித்தது.
ஆனால், மூடப்பட்டிருந்த அந்த நிறுவனத்தில் தனி ஒரு ஆளாக சென்று பணியாற்றியவர், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Kyle Gendreau. அவரது தலையில் அனைத்து சுமைகளும் விழுந்தன. பெருந்தொற்று பாதிப்பை சமாளித்து, நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்டு, மீண்டும் லாப நிலைக்கு கொண்டு வரும் மிகப்பெரிய இலக்கு அவர் முன் இருந்தது.

இந்நிலையில், நமது சிங்கப்பூரின் உதவியுடன் அந்த இலக்கை நோக்கி அந்நிறுவனம் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. இதுகுறித்து Kyle CNA-வுக்கு மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “நாங்கள் அலுவலகங்களை மூடிவிட்டாலும், நான் அலுவலகம் செல்வதை நிறுத்தவில்லை. ஏனென்றால் இந்த பெரும் தடையை எவ்வாறு கடந்து செல்வது என்பதைக் கண்டுபிடிப்பதில் எனக்கு மகத்தான பொறுப்பு இருந்தது. ஒரு வணிகத்தை நடத்துவது மற்றும் உலகெங்கிலும் எங்களது வியாபாரம் தொடர்பான ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்பது பற்றி யோசிப்பது எனது மனதை உறுதிப்படுத்த உதவியது. நோய்த்தொற்று ஏற்பட்ட நேரத்தில் எங்களது வருமானம் 80 சதவிகிதம் வீழ்ச்சியைக் கண்டது.
இந்த நிலையில் தான் நாங்கள் ஒரு மிக முக்கிய முடிவினை எடுத்தோம். எங்களின் சாம்சோனைட் நிறுவனத்தின் தயாரிப்பு மேம்பாடு, Brand Reach போன்றவற்றை ஆசியாவில் விஸ்தரிக்க முடிவு செய்தோம். அதற்கு நாங்கள் தேர்வு செய்த இடம் சிங்கப்பூர். உடனடியாக சிங்கப்பூரில் எங்கள் நிறுவனத்தின் கிளையை நிறுவினோம்.
ஹாங்காங்கிலும் எங்கள் நிறுவனத்தில் அலுவலகம் உள்ளது. நீண்ட காலமாக அங்கு தொழில் செய்து வருகிறோம். ஆனால் ஒரு விரிவான உலகளாவிய ஆய்வுக்குப் பிறகு, சாம்சோனைட்டின் வரலாற்றில் சிங்கப்பூர் ஒரு நல்ல அடுத்த படியை நிச்சயம் உருவாக்கும் என்று நாங்கள் தீர்மானித்தோம்.
சில கார்ப்பரேட் மற்றும் இதர செயல்பாடுகள் ஹாங்காங்கில் தொடர்ந்து இருக்கும் அதே வேளையில், சிங்கப்பூரில் உள்ள எங்களின் கிளை, நிறுவனத்தின் தயாரிப்பு மேம்பாடு, புதுமை (Innovation) மற்றும் Brand மதிப்பு போன்றவற்றை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.
சிங்கப்பூர் சந்தையில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. சிங்கப்பூரில் உள்ளவர்களின் திறமைகளையும் நாங்கள் நன்கு அறிவோம். சிங்கப்பூரில் இருந்து 80 நபர்களை மிக முக்கிய பொறுப்புகளில் பணியமர்த்த உள்ளோம். அதுமட்டுமின்றி, சிங்கப்பூரில் அதிக அளவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளோம். வெளிநாடுகளில் இருந்து எண்ணற்ற பணி விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. திறமையான பணியாளர்களை தேர்வு செய்வதன் மூலம், எங்களது உலகளாவிய வணிகத்தில் மிக முக்கியமான பகுதியாக இருக்கும் ஆசிய பிராந்தியத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு சிங்கப்பூரில் உள்ள எங்கள் அலுவலகம் துணைபுரியும். நாங்கள் உலகில் எல்லா இடங்களிலும் வளர்ந்து வருகிறோம், ஆனால் ஆசியாவில் வளர்ச்சி பெறுவதே எங்களது ஒரே குறிக்கோள்” என்று தெரிவித்துள்ளார்.
Samsonite சந்தை மதிப்பின் படி, அந்நிறுவனத்தில் மிக முக்கிய பொறுப்புகளுக்கு மாதம் மூன்றிலிருந்து 5 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தலைமை அலுவலகம்
Samsonite Singapore Pte Ltd
6 Temasek Boulevard
12-01 Suntec Tower 4
Singapore 038986
Aftersale Service Centre
16 Tannery Lane
Crystal Time Building
01-00
Singapore 347778
செயல்படும் நேரம்: திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை. ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் நிறுவனம் இயங்காது.