TamilSaaga

“சிங்கப்பூரர்களுக்கு இதை அர்பணிக்கிறோம்” – சாங்கி விமானநிலையம் வெளியிட்ட அற்புத காணொளி – வீடியோ உள்ளே

இன்று நமது சிங்கப்பூர் தனது 56வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றது. இந்நிலையில் பெருந்தொற்று காரணமாக பெரிய அளவில் கொண்டாட்டங்கள் இல்லாமல் நாடு முழுவதும் மிகுந்த பாதுகாப்போடு தேசிய தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சிங்கப்பூரின் புகழ்பெற்ற சாங்கி விமான நிலையம் தேசிய தினத்தை முன்னிட் சிறப்பானதொரு காணொளியை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சாங்கி விமான நிலையம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “நமது தேசம் தனது 56 வது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், ​​இந்த வீடியோவை சிங்கப்பூர் மக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறோம். அவர்கள் சாங்கி விமானநிலையத்தை ஒவ்வொரு முறையும் தொடும்போதும், இது அவர்களின் வீடு என்ற எண்ணத்தை அவர்கள் பெறுகின்றனர். நாம் அனைவரும் விரைவில் இதை மீண்டும் அனுபவிக்கலாம். தேசிய தின வாழ்த்துக்கள், வாழ்க சிங்கப்பூர்.” என்று குறிப்பிட்டுள்ளது.

Related posts