TamilSaaga

Exclusive : “நிறுத்திவைக்கப்பட்டுள்ள VTL” : ஜனவரி 21 to 31 – விரைவாக விற்றுத்தீரும் சென்னை to சிங்கப்பூர் VTL டிக்கெட்கள்

தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதை (VTL) விமானங்கள் மற்றும் பேருந்துகளுக்கான அனைத்து புதிய டிக்கெட் விற்பனைகளும் கடந்த ஆண்டு டிசம்பர் 23 முதல் இந்த ஆண்டு ஜனவரி 20 வரை முடக்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) கடந்த ஆண்டு டிசம்பர் 22 அன்று தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த ஓமிக்ரான் வழக்குகளுக்கு சிங்கப்பூரின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதே இந்த நடவடிக்கை என்று அமைச்சகம் அப்போது தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : “ஒரு சிறந்த வாய்ப்பு” : Europe மற்றும் Poland ஆகிய நாடுகளில் பணிபுரிய CAD Designer தேவை

மேலும் VTL விமானம் அல்லது பேருந்தில் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்த மற்றும் மற்ற அனைத்து VTL தேவைகளைப் பூர்த்தி செய்யும் எல்லா பயணிகளும் தனிமைப்படுத்தல் இல்லாத பயணத் திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயணிக்கலாம். மேலும் ஜனவரி 20, 2022க்குப் பிறகு VTL பயணத்திற்கான ஒதுக்கீடுகளையும் டிக்கெட் விற்பனையையும் MOH தற்காலிகமாகக் குறைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்ந்து முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து, நிலைமை மாறும்போது இந்தக் கொள்கையைப் புதுப்பிக்கும்.

மேலும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MTI) கடந்த ஆண்டு இறுதியில் VTL திட்டங்களுக்கான தற்காலிக தடையை விதித்தபோது, ஜனவரி 21, 2022 முதல் VTL (நிலம்) வழியாக சிங்கப்பூர் அல்லது மலேசியாவிற்கு பயணம் செய்வதற்கான அளவு மற்றும் டிக்கெட் விற்பனையை பாதியாக குறைக்கும் என்று கூறியது. டிசம்பர் 22, 2021 இரவு 11.59 மணி முதல் ஜனவரி 20, 2022 இரவு 11.59 மணி வரை சிங்கப்பூர் அல்லது மலேசியாவிற்குப் பயணிக்க புதிய VTL (Land) பேருந்து டிக்கெட்டுகள் விற்கப்படாது என்றும் தெரிவித்தது.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் பொங்கல் கொண்டாட்டங்கள்” – புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்களுக்கு பிரத்தியேக ஏற்பாடு

இந்நிலையில் நமது தமிழ் சாகா சிங்கப்பூருக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற செய்தியின்படி ஜனவரி 20 வரை VTL புக்கிங் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 21லிருந்துஜனவரி 31 வரை நிறுத்தப்படவில்லை. ஆகையால் வரும் ஜனவரி 21 2022 முதல் இம்மாத இறுதி வரை அதாவது ஜனவரி 31 2022 வரை சென்னையில் இருந்து சிங்கப்பூர் வருவதற்கான விமான டிக்கெட்டுகள் அதாவது VTL வழியாக சென்னையில் இருந்து சிங்கப்பூர் வருவதற்கான VTL டிக்கெட்கள் வேகமாக விற்று தீர்ந்து வருவதாகவும். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திலும் அதி வேகமாக டிக்கெட்கள் திருந்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த பயணிகளுக்கான டிக்கெட் விலையும் 50,000 இந்திய ரூபாய் வரை உள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.

News Source : நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts