TamilSaaga

காகித ஆலையில் பணிபுரியும் ஊழியரின் தலை துண்டிக்கப்பட்ட விவகாரம்… பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என அறிவுரை வழங்கிய சிங்கப்பூர் நீதிமன்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு காகிதாலையில் பணிபுரிந்த ஊழியர் மரணம் அடைந்த வழக்கில் பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றாததே மரணத்திற்கு காரணம் என வழக்கை விசாரித்த நீதிமன்றம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி பதினொன்றாம் தேதி காகித அட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் சீன நாட்டைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் வேலை செய்து கொண்டிருந்தார்.

அந்த நிறுவனமானது காகித அட்டை பெட்டிகளை உருவாக்கும் நிறுவனம் ஆகும். அதில் பயன்படுத்தப்படும் இயந்திரம் காகித அட்டைகளை வடிவத்திற்கு ஏற்றார் போல் வளைத்து, பசையால் இணைத்து, மடித்து அதை பெட்டிகளாக அடுக்கும் திறன் வாய்ந்தது. இந்த இயந்திரத்தை இயக்குவதற்கான பயிற்சியானது சீன ஊழியருக்கு அளிக்கப்பட்டு இருந்தது. எனினும் இயந்திரத்தின் கழிவுகளை வெளியேற்றும் பகுதியில் அருகில் இவர் மிகவும் நெருங்கி சென்றதாக கூறப்படுகின்றது. எனவே இயந்திரத்துக்குள் சிக்கிய அவரது தலையானது வேகமாக உள்ளே இழுக்கப்பட்ட பொழுது சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

பல லட்சங்களை கொட்டி உறவினர்களை இழந்து பிரிந்து வெளிநாட்டில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்கள் உயிர்தான் எல்லாவற்றிற்கும் மேல் என்பதை உணர்ந்து கவனமாக செயல்பட வேண்டும். வேலை இடத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பின் ஒரு கணநேர கவனச்சிதறல் கூட பெரும் ஆபத்திற்கு வழி வகுக்கலாம்.எனவே வேலை இடத்தில் பாதுகாப்பு முக்கியம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் வேலை இடங்களில் மரணங்கள் அதிகரித்து வருவதால் ஊழியர்கள் கவனமாக வேலை செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளது.

Related posts