TamilSaaga

சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி 2024 ஆம் ஆண்டில் வேற லெவலில் இருக்கும்… வெளியான புள்ளி விவரங்கள்!

சிங்கப்பூரின் பொருளாதாரமானது மெதுவாக ஏற்றமடைவதை ஒட்டி 2024 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி மூன்று சதவீதம் அதிகரிக்கும் என புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. சிங்கப்பூரின் ஏற்றுமதியானது ஓரளவு இந்த வருடம் குறைவாக உள்ளதால் மூன்றாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சியானது 1 சதவீதம் அதிகரித்தது.

இந்நிலையில் வருகின்ற ஆண்டுகளில் பொருளாதார ஏற்றுமதியானது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த ஆண்டு விட இரண்டு சதவீதம் அதிகரித்து மொத்தம் மூன்று சதவீதம் வளர்ச்சி அடையும் என தொழில் அமைச்சகம் கூறியுள்ளது. சிங்கப்பூரில் இதுவரை எடுக்கப்பட்ட கணக்கீடுகளின் அடிப்படையில் மூன்றாவது காலாண்டில் 1.1% பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியானது இரண்டாம் காலாண்டில் 0.5 எனவும், முதல் காலாண்டில் 0.4 ஆகவும் இருந்தது குறிப்பிடுத்தக்கதாகும்.

முதல் பாதியாண்டில் பொருளாதார வளர்ச்சியானது மந்தமாக இருந்த நிலையில் மூன்றாவது காலாண்டில் மெதுவாக அதிகரிக்க தொடங்கியது. நோய் தொற்றுக்குப் பிறகு சிங்கப்பூருக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக விமான பயணங்களில் எண்ணிக்கையும் அதிகரித்து விமான துறையின் வாயிலாக நாட்டிற்கு அதிகமாக வருவாய் கிடைத்தது பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. போக்குவரத்து மட்டுமல்லாமல் தங்குமிடம் சுற்றுலாத்துறை ஆகியவற்றின் ஒட்டுமொத்த வளர்ச்சி காரணமாக சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி ஆனது ஓரளவு அதிகரித்தது. இந்நிலையில் இனி வருகின்ற ஆண்டில் இதைவிட அதிகரித்து 3 சதவீதம் வரை வளர்ச்சி காணும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts