TamilSaaga

கொரோனா பரவலால் மூன்று நாட்களுக்கு மூடப்படுகிறது – டெலோக் ப்ளங்கா உணவு மையம்

சிங்கப்பூரில் இயங்கி வரும் டெலோக் ப்ளங்கா உணவு மையம் இன்று (16.06.2021 புதன்) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரெச்சல் ஆங்க் (Rachel Ong) தெரிவித்துள்ளார்.

இந்த உணவு மையத்தில் விற்பனையாளராக பணிபுரியும் சிங்கப்பூரை சேர்ந்த 42 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாகவும் இவர் 64218-வது நோயாளி எனவும் சுகாதாரத் துறை அமைச்சு கடந்த திங்கள் கிழமை அறிவித்தது.

ஏற்கனவே புகிட் மேரா சந்தை கொரோனா பரவலில் (Bukit Merah View Market Cluster) பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர் இவர் எனவும் கடந்த ஜீன் 12 ஆம் தேதி சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது இவருக்கு உடல்வலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக இந்த உணவகத்தை தீவிரமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிக்காக மூன்று நாட்கள் மூடப்படுவதாக மேற்கு கடலோர நகர சபை (West Coast Town Council) தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளதாக எம் எஸ் ஆங்க் (MS Ong) கூறியுள்ளார்.

மேலும் தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் விசாரணைக்கு டெலோக் பிளங்கா கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையகம் வைத்திருப்பவர்கள் சங்கம்உதவும் என்று தெரிவித்துள்ளார்.

சுற்றியுள்ள குடியிருப்புகள் மற்றும் வளாகங்களுக்கு இதனை அறிவிக்கும் வகையில் அறிவிப்பினையும் உணவகம் மீது நகர சபை அளித்துள்ளது.

இங்கு வசிப்பவர்கள் மற்றும் விற்பனையகம் வைத்திருப்பவர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் எனவே தேவையான முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த நாங்கள் பணியாற்றுவோம் என்றும் கூறியுள்ளார்.

Related posts