TamilSaaga

சிங்கப்பூரில் வேலை தேடுறீங்களா? என்ன செய்யணும் ஒரே குழப்பமா இருக்கா… skilled testல வேலை கிடைக்க இந்த ரூட்டை follow பண்ணுங்க

சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல ஏகப்பட்ட வேலை வாய்ப்பு பாஸ்கள் இருக்கிறது. இதில் அதிகம் பேருக்கு தெரிந்த skilled test முடித்து வேலைக்கு வர என்னென்ன process இருக்கும். உங்கள் ஆசைக்கு பாதை வைத்து சிங்கப்பூர் வேலைக்கு வர என்ன தடங்கல் ஏற்படும். அதை எப்படி சரி செய்யலாம் என்பதை தான் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சிங்கப்பூருக்கு வேலைக்காக ஆசைப்படும் போது முதலில் உங்களின் கல்வி தகுதி தான் முக்கியமாக பார்க்கப்படும். படித்திருந்தால் ஒரு பக்கமும், படிக்காதவர்கள் ஒரு பக்கமும் வெவ்வேறு விதமான பாஸ்களுக்கு அப்ளே செய்யலாம். ஆனால் சில படித்தவர்களும் கூட செலவை கருத்தில் கொண்டு படிக்காதவர்களுக்கு இருக்கும் வழியை பின்பற்றுகின்றனர்.

அதில் ஒன்று தான் skilled test. இதுகுறித்து நமது தளத்தில் நிறைய தகவல்களை பார்த்திருக்கிறோம். இருந்தும் skilled test மூலம் வேலைக்கு செல்லும் போது சில தடங்கல் இருக்கும். அதை தெரிந்து கொள்ளுங்கள். skilled test அடிக்க முதலில் தமிழ்நாட்டில் இருக்கும் அதிகாரப்பூர்வ இன்ஸ்ட்யூட்டினை தேர்ந்தெடுங்கள். இதற்கு முதலில் உங்களுக்கு தெரிந்த நண்பர்களை வைத்து விசாரிக்கலாம். கிளை இன்ஸ்ட்டியூட்டில் படிப்பதை விட பிரபலமான இன்ஸ்ட்யூட்டில் படிப்பது நல்லது. ஏனெனில் இவர்களுக்கு தான் அதிகமான கோட்டாக்கள் கிடைக்கும். கிளைகளுக்கு இதை விட ரொம்பவே கம்மியான கோட்டா கிடைப்பதால் டெஸ்ட்டினை எழுத அதிக நாட்கள் எடுக்கும்.

அடுத்து 45 முதல் 60 நாட்கள் பயிற்சி முடிந்து டெஸ்ட் எழுதுவீர்கள். 4 மணி நேரம் நடக்கும் தேர்வு எழுத்து மற்றும் பிராக்டிகல் என அமைந்து இருக்கும். இதை முடித்ததும் அதிக பட்சமாக ஒன்றில் இருந்து இரண்டு மாதத்திற்குள் ரிசல்ட் வந்து விடும். இப்போது இருக்கும் கோட்டா பிரச்னையால் சிலருக்கு இதற்கு மேலும் தாமதம் ஆகும். அடுத்து, ரிசல்ட் வந்தவுடன் உங்களுக்கு கம்பெனி போட வேண்டும்.

சில இன்ஸ்ட்யூட்கள் கம்பெனி போடுகிறார்கள். சிலர் ரிசல்ட் பேப்பரை வைத்து தெரிந்த ஏஜென்ட் மூலம் கம்பெனி போட்டு கொள்வார்கள். கம்பெனி குறித்து தெரிந்ததும் கூகுள் அல்லது இங்குள்ள நண்பர்களிடம் விசாரித்து கொள்ளுங்கள். அது உங்களுக்கு திருப்தி அளிக்கும் பட்சத்தில் ஓகே சொல்லுங்கள். ipa அப்ளே செய்யப்படும். இதற்கு தோராயமாக 3 வாரம் எடுக்கும். IPA வந்தவுடன் தெளிவாக படியுங்கள். இதில் உங்களின் சம்பள விவரங்கள் என அனைத்தும் இருக்கும். சந்தேகம் இருப்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் அடுத்த சில நாட்களில் டிக்கெட் போட்டு நீங்க சிங்கப்பூர் வேலைக்கு வந்து விடலாம். இதற்கு தோராயமாக 3 முதல் 3.5 லட்ச ரூபாய் வரை செலவுகள் இருக்கும்.

இங்கு உங்களுக்கு சம்பளமாக நாள் ஒன்றுக்கு $18 முதல் $20 சிங்கப்பூர் டாலர் வரை கொடுப்பார்கள். OTயும் இருக்கும். இந்த பெர்மிட்டில் நீங்க சிங்கப்பூர் வேலைக்கு வருவதால் தங்குமிடத்தினை கம்பெனியே பார்த்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts