TamilSaaga

சிங்கப்பூர் நண்பர்களே உஷார்…300$ வரை பணம் தருவதாக வாட்ஸ் அப்பில் உலா வரும் புது மோசடி!

சிங்கப்பூரில் வாட்ஸ் அப்பில் குறிப்பிட்ட தகவலை பகிர்ந்தால் சன்மானம் அனுப்பப்படும் எனக் கூறி மோசடிகள் நடந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சிங்கப்பூரில் உள்ள பிரபலமான செய்தி நிறுவனம் எஸ் பி ஹெச் எனப்படும் நிறுவனம் ஆகும். சில மோசடிக்காளர்கள் தாங்கள் இந்த மீடியாவில் இருந்து உங்களை தொடர்பு கொள்கின்றோம் எனக் கூறி பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்கின்றனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவை மோசடியானவை என மீடியா நிறுவனம் தற்பொழுது பொதுமக்களுக்கு விழிப்புணர்வை அளித்துள்ளது. வாட்ஸ் அப்பில் குறிப்பிட கேள்விக்கு பதில் அளிப்பதற்கு 8 வெள்ளி முதல் 300 வெள்ளி பணம் அளிக்கப்படும் என உறுதி கூறி தகவல்களை பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து குறிப்பிட்ட மீடியா நிறுவனம் கூறும் பொழுது வாட்ஸ் அப்பில் உங்களது தனிநபர் தகவல்களையோ விவரங்களையோ மற்றும் வேறு ஏதாவது செய்திகளையோ அனுப்பினால் பணம் கொடுக்கப்படும் என்று வரும் செய்தியை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts