TamilSaaga

புதிய விதிகளோடு மீண்டும் திறக்கும் கடைகள் – எதையும் சமாளிக்க தயாராகும் உணவகங்கள்

சிங்கப்பூரை பொறுத்தவரை இறுதியாக இந்த இரண்டாம்கட்ட கட்டுப்பாடுகள் வரும் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி முடிவுக்கு வந்து, மீண்டும் உணவகங்கள் திறக்கும்பட்சத்தில் பல குழப்பங்களை எதிர்நோக்கவுள்ளதாக உணவாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தடுப்பூசி போட்டவர்கள் யார்? போடாதவர்கள் யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவும் என்று உணவாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு உணவாக அவரது அனுமதில் சில செய்திகளை CNAவிடம் பகிர்ந்தார். அவரது அனுபவத்தில், வாடிக்கையாளர்கள் முதலில் ஒரு டேபிளை தேட முனைகிறார்கள், அதே நேரத்தில் ஆர்டர் செய்த உணவு வருவதற்காக ஒருவர் வரிசையில் நிற்கிறார். இந்த நிலையில் தான் உணவாக உரிமையாளர்கள் வருகின்ற கஸ்டமர்களின் வெப்பநிலையை சரிபார்த்து அவர்களை அனுமதிக்க வேண்டும் என்றார்.

உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் பல மனநிலைகளில் வருவார்கள் என்றும் அவர்களை சமாளிப்பதை எண்ணி மன அழுத்த நிலைகள் அதிகரிப்பதை தங்களால் உணர முடிகிறது என்றும் சில உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் உணவகங்களில் பணியாற்றும் பணியாளர்களும் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். புதிய கட்டுப்பாடுகளுடன் மக்களை சமாளிப்பது ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் அவர் கருதுகிறார்.

Related posts