TamilSaaga

சிங்கப்பூர்.. Hack செய்யப்பட்ட இளைஞரின் Phone.. “ஆபாச படங்களில்” அவர் முகத்தை போலியாக இணைத்து மிரட்டல் – இறுதியில் நேர்ந்த பரிதாபம்

சிங்கப்பூரில் 20 வயது சிங்கப்பூர் இளைஞன் ஒருவர் தனக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பை அட்டென்ட் செய்த பிறகு அவரது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் Deepfake தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவருடைய முகம் ஒரு ஆபாச வீடியோவாக மாற்றப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று காலை தூக்கத்தில் இருந்து எழுந்த அந்த இளைஞர், தன் மேனேஜர் தான் அழைப்பதாக நினைத்து எந்த எண்ணில் இருந்து அழைப்பு வருகின்றது என்பதை பார்க்காமல் அழைப்பை அட்டென்ட் செய்துள்ளார்.

அதன் பிறகு அழைப்பில் வேறு யாரோ பேசியதால் அந்த அழைப்பையும் துண்டித்துள்ளார் அந்த இளைஞர், இந்த சமத்துவம் நடந்த சிறிது நேரத்தில் சீன மொழியில், “லோரி” என்ற பெயரில் Line என்ற மெசேஜிங் செயலியில் இனிது அந்த இளைஞருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

சிங்கப்பூர் Bukit Timah பகுதி.. “ராட்சச பல்லியை அப்படியே விழுங்கிய ராஜ நாகம்” – இது மிகவும் அரிது என்று கூறும் புகைப்பட கலைஞர்!

அந்த குறுஞ்செய்தியில் அந்த ஹேக்கர் ஆசாமி அவருக்கு ஒரு ஆபாச வீடியோவை அனுப்பியுள்ளான், அதில் அந்த இளைஞரின் முகம் DeepFake மூலம் மாற்றப்பட்டிருப்பதை கண்டு அவர் அதிர்ந்துள்ளார். ஹேக்கர் தனது போனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த படங்களை திருடி அவ்வாறு செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர் கூறினார்.

அந்த இளைஞர் வெளியிட்ட பதிவு

மேலும் அந்த வீடியோவை அனுப்பி அந்த இளைஞரிடம் அந்த ஹேக்கர் ஆசாமி 8000 வெள்ளி கேட்டு மிரட்டியுள்ளான். பணத்தை தர மறுத்தால் அந்த வீடியோவை அந்த இளைஞர் போனில் உள்ள அனைத்து Contactsகளுக்கும் அனுப்புவேன் என்றும் மிரட்டியுள்ளான்.

ஆனால் அதற்கு வளைந்துகொடுக்காத இளைஞர் உடனே சிங்கப்பூர் போலீசை நாடி புகார் அளித்த சில மணிநேரங்களில் அந்த இளைஞரின் பல நண்பர்களுக்கு அந்த வீடியோ பல வெளிநாட்டு எண்களில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

உண்மையில் இந்த நிகழ்வு தன்னை மிகவும் பாதித்துள்ளதாகவும் போலீசார் விரைந்து இதுபோன்ற குற்றங்களை தடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிகழ்வு குறித்த விசாரணை தற்போது நடந்து வருகின்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts