TamilSaaga

ஜி-20 மாநாடு என்றால் என்ன ? ஜி-20ல் சிங்கப்பூர் அங்கம் வகிக்கிறதா ? – முழு விவரம்

ஜி-20 நாடுகள் எவை?

இந்த ஆண்டு ஜி-20 மாநாடு ரோம் நகரின் தலைநகரமான இத்தாலியில் நடைபெற உள்ளது. சரி இந்த ஜி-20 மாநாடு என்றால் என்ன ? இந்த ஜி-20 மாநாட்டில் செயல்பாடுகள்தான் என்ன?. அமெரிக்கா, ஜப்பான், கனடா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற ஜி8 நாடுகள் இந்த ஜி-20 வந்துவிடுகின்றன.

மேலும் இந்த நாடுகளோடு சேர்ந்து அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மெக்சிகோ, ரஷ்யா, சவூதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா மற்றும் துருக்கி ஆகிய 12 வளரும் நாடுகளும் சேர்கின்றன. இந்த நாடுகளின் கூட்டமைப்பே ஜி-20 நாடுகள்.

ஏன் இந்த நாடுகள் ஜி-20 நாடுகள் என்று அழைக்கப்படுகிறது ?

மேற்குறிப்பிட்ட இந்த 20 நாடுகளின் பொருளாதாரம் ஒட்டுமொத்த உலகின் பொருளாதாரத்துக்கு சமமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த உலகின் மொத்த ஜிடிபி-யில் 85% இந்த 20 நாடுகளுக்கு சொந்தமானது.

அது மட்டும் இல்லாமல் உலக மக்கள் தொகையில் சுமார் 65 சதவிகித மக்கள் இந்த இருபது நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பு.

ஜி-20 மாநாட்டில் என்ன நடாகும் ?

எல்லா ஜி-20 உறுப்பு நாடுகளும் தங்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களை இந்த மாநாட்டில் பேசுவார்கள். அந்த நாடுகளுடைய உறுப்பினர்கள் கொண்டுவரும் பெரிய திட்டங்களுக்கும் இங்கு விவாதிக்கப்படும் . மற்ற நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவையும் இந்த மாநாட்டில் கேட்பார்கள்.

சிங்கப்பூர் அமைச்சர் லாரன்ஸ் பயணம்

இந்த ஜி-20 நாடுகளில் சிங்கப்பூர் ஒரு அங்கமாக இல்லை என்ற போதும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள சிங்கப்பூருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சிங்கப்பூர் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் தற்போது புறப்பட்டுள்ளார். உலகப் பொருளாதாரத்தில் உள்ள குளறுபடிகளை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்றும் மேலும் இந்த மாநாடு குறித்த பல தகவல்களை தான் தொடர்ந்து பகிர்வேன் என்றும் அமைச்சர் லாரன்ஸ் தனது முகப்புத்தக வாயிலாக தெரிவித்துள்ளார்

Related posts