இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச தற்போது சவூதி அரேபியா நாட்டிற்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. NDTV செய்தி நிறுவனம் மற்றும் இலங்கையில் உள்ள பல முன்னணி செய்தி நிறுவனங்கள் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும் அவர் சிங்கப்பூரில் இருந்து சவூதி அரேபியா நாட்டில் உள்ள ஒரு இடத்திற்கு செல்லவிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றனது.
இலங்கையில் தற்போது நிலவு சூழல் அனைவரும் அறிந்ததே, இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) இலங்கைக்கான அனைத்து அத்தியாவசியமற்றப் பயணங்களையும் ஒத்திவைக்குமாறு சிங்கப்பூரர்களுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA) அறிவுறுத்தியது.
இலங்கையில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ராஜினாமா செய்யுமாறு மக்கள் வலியுறுத்திய நிலையில் நமது சிங்கப்பூர் அரசு இந்த முடிவை எடுத்து என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஜனாதிபதி மாளிகை பொதுமக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து தப்பிய ராஜபக் மாலத்தீவுகளுக்கு தப்பிச்சென்றுள்ளர் என்று முன்னதாக NDTV என்ற பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் அங்கிருந்து அவர் சிங்கப்பூர் வர முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அவர் தற்போது சிங்கப்பூர் வந்துகொண்டிருப்பதாகவும் இங்கிருந்து சவூதி செல்வர் என்றும் கூறபடுகிறது.