TamilSaaga

வெளிநாட்டு தொழிலாளர்களின் மனங்களை வென்ற “வைகோ மகன்” துரை – சிங்கப்பூரில் வலிமையாக கால் பதிக்கிறதா மதிமுக?

தமிழகத்தைச் சேர்ந்த எந்தவொரு அரசியல் கட்சியாக இருந்தாலும், அதன் பார்வை மிஸ்ஸாகாத ஒரு நாடு என்றால்… அது நம் சிங்கப்பூர் தான். ஆம்! தமிழகத்தில் என்னதான் அவர்கள் தங்கள் தகுதிக்கேற்ப ஒரு பெரிய கட்சியாக இருந்தாலும், சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் மத்தியிலும் தாங்கள் ஆளுமையுடன் இருக்க வேண்டும் என்ற அக்கட்சிகளின் நோக்கமே இதற்கு காரணம்.

அந்த வகையில் தமிழகத்தில், திராவிட காட்சிகளில் ஒன்றான வைகோவின் மதிமுக, சிங்கப்பூரில் மிக ஆக்டிவாக இயங்கி வருகிறது. 1993-ல், திமுக எனும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வைகோ உட்பட சிலர் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து நீக்கப்பட்ட அனைவரும் ஒருங்கிணைந்து ‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினர். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

இப்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு 77 வயதாகிறது. ஆக்டிவ் பாலிடிக்சில் அவர் இருக்கிறாரே தவிர, முழு வீச்சில் அவரால் செயல்பட முடியவில்லை. இந்த சூழலில் தான் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மகன் துரை வையாபுரி என்கிற துரை வைகோவுக்கு தலைமை கழக செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இது கட்சியில் சலசலப்பையும் ஏற்படுத்தியது.

மேலும் படிக்க – “ஆறு மாதத்தில் வேலை” : புதிய சாதனையை படைத்து அசத்தும் சிங்கப்பூர் – பதில் சொல்லும் Survey Report

எனினும், விமர்சனங்களை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத துரை வைகோ, கட்சிப் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் இடையே கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் இவர் செய்த உதவி ஒன்று சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதாவது, கடந்த 2021 நவம்பர் மாதம், சில வாரங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்த குமரவேல் ராஜா என்பவர், பணி நேரத்தில் திடீரென இறந்து போனார். கடந்த நவம்பர் 3ம் தேதி இறந்த அவரது உடல், நவம்பர் 6ம் தேதி திருச்சி விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. துரை வைகோவின் முயற்சியால் தான் இறந்த குமரவேலின் உடல் சிங்கப்பூரில் இருந்து தமிழகம் கொண்டுவரப்பட்டது.

இந்த தகவலை வெளிப்படையாகவே தனது முகநூல் பக்கத்தில் துரை வைகோ வெளியிட்டிருந்தார். அதில், “குமரவேல் உடலை எப்படி இந்தியாவிற்கு கொண்டு வருவது என்று புரியாமல் அவரது உறவினர்கள் தவித்த நிலையில், சிங்கப்பூரில் உள்ள எனது நண்பர் யாஸீன் அவர்கள் மூலம் அனைத்து மருத்துவமணை விதிகளுக்கு உட்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் முடித்து, இறந்துபோன குமரவேல் ராஜா உடலை,06 ம் தேதி காலை 6 மணிக்கு திருச்சி விமானத்தில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, சொந்த ஊரில் உள்ள அவரின் பெற்றோரிடம் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.

துரை வைகோவின் இந்த செயலுக்கு சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி, சிங்கப்பூரில் கட்சியை பலப்படுத்தும் பணியிலும் துரை வைகோ ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் வாழ் மதிமுக தொண்டர்களுடன் துரை வைகோ இணையவழி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க – “விரைவில் மீண்டும் சந்திப்போம்” : சிங்கப்பூரர்களின் மனம் கவர்ந்த Asia Grand Restaurant – டக்குனு எடுத்த “சோகமான” முடிவு

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், “சிங்கப்பூரில் உள்ள மறுமலர்ச்சி தி.மு.க தோழர்களுடனான, இணையவழி கலந்துரையாடல் கூட்டம் திரு.சுரேஷ்குமார் அவர்களின் தலைமையில் 08.01.2022, சனிக்கிழமையன்று நடைபெற்றது. அவர்கள் விடுத்த அழைப்பினை ஏற்று, கூட்டத்தில் பங்கேற்றேன்.

கட்சி வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக, சிங்கப்பூர் மறுமலர்ச்சி தி.மு.க தோழர்கள் அனைவரின் கருத்துகளையும், விருப்பங்களையும் குறைகளையும் கவனமுடன் கேட்டு அறிந்தேன். அவர்கள் வைத்த கோரிக்கைகளை விரைவில் பரிசீலித்து அதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தேன்.

கலிங்கப்பட்டியில் தொடங்கி சிங்கப்பூர் வரையிலும், கடந்த ஆறுமாத காலத்தில் கழகத் தோழர்கள் பலரிடம் உரையாடும் வாய்ப்பையும், அவர்களின் உணர்வுகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறேன். சிங்கப்பூர்வாழ் கழகத் தோழர்களுடனான சந்திப்பும், உரையாடலும் மனதிற்கு நிறைவாகவும் மகிழ்வாகவும் அமைந்தது” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழகம் தாண்டி, கடல் கடந்தும் மதிமுகவை வலிமைப்படுத்தும் நோக்கில் துரை வைகோ செயல்படுவது இதன் மூலம் நிரூபணமாகிறது. சிங்கப்பூரில் இன்னும் வலுவாக கால் பதிக்குமா மதிமுக? பொறுத்திருந்து பார்ப்போம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts