TamilSaaga

“சிங்கப்பூரில் வெளிநாட்டு மேலாளர்கள் சம்பளம் தொடர்பான செலவு குறைந்தது” – ஆய்வு முடிவு

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் பல நிறுவனங்கள் சென்ற ஆண்டு தங்களிடம் பணியாற்றும் வெளிநாட்டு மேலாளர்களுக்கு சம்பளம் குறைப்பு மற்றும் அவர்களுக்கு வழங்கும் சலுகைகள் குறைப்பு ஆகியவற்றால் ஒட்டுமொத்த சம்பள தொகுப்பிற்காக மிக குறைந்த அளவிலேயே செலவு செய்துள்ளன என்று தற்போது வெளியாகியுள்ள ஒரு ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன.

உலக அளவில் வெளிநாட்டை சேர்ந்த ஊழியர்களுக்கு அதிக அளவில் சம்பளம் கொடுக்கும் நாடுகளின் பட்டியலில் நமது சிங்கப்பூர் 5வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ECA International என்ற நிறுவனம் தான் இந்த தகவலை வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூருக்குள் நடுத்தர நிலையில் தற்போது பணியாற்றி வரும் வெளிநாட்டவருக்கு கடந்த ஆண்டு சராசரியாக வழங்கப்பட்ட சம்பளம் 3,05,000 வெள்ளியாக இருந்த நிலையில் இருந்தது என்றும் இது அதற்கு முந்தய ஆண்டைவிட 7300 அமெரிக்க டாலர் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் வெளிநாட்டு பணியாளர்களை வேலைக்கு அனுப்ப 17வது செல­வு­மிக்க நாடாக சிங்­கப்­பூர் உள்ளது. மேலும் ஊழியர்களின் தங்­கு­மி­டம் மற்­றும் அவர்களுக்கு வழங்கப்படும் பிற சலு­கை­க­ளின் குறைந்த செலவே இந்த இச்­ச­ரி­வுக்­குக் கார­ணம் என்று கூறப்படுகிறது.

Related posts