TamilSaaga

சிங்கப்பூரில் 700க்கும் அதிகமான முன்னாள் குற்றவாளிகளுக்கு வேலை – அமைச்சர் டான் சீ லெங்

சிங்கப்பூரில் உள்நாட்டு வேலைவாய்ப்பில் சிங்கப்பூரர்களை பணியமர்த்துவதற்கு நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் சுமார் 700க்கும் அதிகமான முன்னாள் குற்றவாளிகள் சிங்கப்பூரில் வேலை அமர்த்தப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டான் சி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கி இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் இந்த 700-க்கும் அதிகமான முன்னாள் குற்றவாளிகள் சிங்கப்பூரில் வேலை அமர்த்தப்பட்டு உள்ளதாக நேற்று நடந்த நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் தெரிவித்தார். இதனையடுத்து வேலையில் சேர்ந்துள் முன்னாள் குற்றவாளிகளின் எண்ணிக்கையானது சுமார் 56 விழுக்காடு என்றும் மீதமுள்ள 44 விழுக்காட்டினர் வேலை வளர்ச்சி திட்டத்திற்கு தகுதி பெற்றதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் சிங்கப்பூரில் 40 வயதிற்கு மேற்பட்ட சிங்கப்பூரர்கள், உடல் ரீதியான குறைபாடு உள்ளவர்கள் மற்றும் முன்னால் குற்றவாளிகள் போன்றவர்களை வேலையில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வேலை வளர்ச்சி சலுகையின் கீழ் சம்பள ஆதரவு தர அரசாங்கம் ஒரு பில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts